சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளின் உடல் உறுப்புகளின் செயல்திறன் அறியும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., தொடங்கி வைத்துபார்வையிட்டார்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில், சர்வதேசமாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு (03.12.2024) உடலியல் மற்றும்மறுவாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளின் உடல் உறுப்புகளின் செயல்திறன் அறியும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  இம்முகாமில், எழும்பு அடர்த்தி (BMD), நுரையீரல் பரிசோரதனை, நரம்பியல்பரிசோதனை, வயிற்றின் கொழுப்பை கண்டுபிடிக்கும் பரிசோதனை, கைகளின் பலம் அறியும்பரிசோதனை, Upper Limb Joint movement assessment, Lower limb Joint movement assessment, இரத்த பரிசோதனை, இலவச மருந்துகள் என உடல் உறுப்புகளின் திறன் அறியும் பரிசோதனைமுகாம் நடைபெற்றது.

உடல் உறுப்புகளின் செயல்திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு PMR மருத்துவர்கள்ஆலோசனை வழங்கினர். அவர்களின் உடல் உறுப்புகளின் செயல்திறன் அதிகரிக்க மருந்துகள்வழங்கப்பட்டன. உடல் உறுப்புகளின் செயல்திறன் அறியும் முகாம் முதல்முறையாகதிருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இன்றுநடைபெற்ற முகாமில் 118 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்தனர். தொடர்ந்து, தலா ரூ.1.05 இலட்சம் மதிப்பிலான மூன்று சக்கர மோட்டார் வாகங்களை 4 மாற்றுத்திறனாளிகளுக்கும், ரூ.13,500/- மதிப்பிலான கையிடைபேசிகள் 10 மாற்றுத்திறனாளிகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப.,  வழங்கினார்.  முன்னதாக, உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்வுநடைபெற்றது. தொடர்ந்து, செவிலியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் எய்ட்ஸ் குறித்தவிழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து, தொடங்கிவைத்தார். 

இம்முகாமில், மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதி பாலன், எழும்பு முறிவு பேராசிரியர் மரு.மணிகண்டம், உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுத்துறை இணை பேராசிரியர் மரு.உதயசிங் அவர்கள், உதவி பேராசிரியர் மரு.கீதா, பொதுமருத்துவ சிகிச்சை பிரிவுத்துறை தலைவர் மரு.ரபி, மரு.சுஜாதா ஆண்ட்ரூ, நுண்ணுயிரியல் துறை உதவி பேராசிரியர் மரு.வேல்விழி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு/மாவட்ட மேற்பார்வையாளர் மரு.ஜெயக்குமார், செவிலியர் கண்காணிப்பாளர்கள், நம்பிக்கை மைய பணியாளர்கள், மற்றும் செவிலியர் பயிற்சி மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.