நெல்லையில் சி.பி.எம்.கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து, நெல்லை சந்திப்பு இரயில் நிலையம் முன்பு இன்று காலை 10.4.25 மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சி.பி.ஐ.எம். மாவட்ட செயலாளர் ஶ்ரீராம் தலைமை ஏற்க திமுக, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, திராவிடத் தமிழர் கட்சி, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் ரசூல்‌மைதீன்‌, தமுமுக மாவட்ட செயலாளர் கோல்டன் காஜா, மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன், மற்றும் மாவட்ட, பகுதி, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.