இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது;
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்திபேரறிவாளனைக் கடந்த மே மாதம் விடுதலை செய்த நிலையில், பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பின்அடிப்படையில், அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலைசெய்துள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பை எஸ்.டி.பி.ஐ. கட்சி மனதார வரவேற்கிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன்உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழக அரசு அமைச்சரவை தீர்மானம் கொண்டுவந்தது. தமிழக அமைச்சரவையின் இந்த தீர்மானம் தான் இந்த வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேருக்கும் விடுதலைகிடைக்க முக்கியமானதாக இருந்தது. இந்த தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க தாமதம் செய்தது தவறானதுஎன சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றம் தனக்குள்ள அதிகாரமான அரசியல் பிரிவு 142வது பிரிவைப் பயன்படுத்திபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கடந்த 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், ஏழு தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என்றுஎஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள், மனித உரிமை ஆர்வலர்கள்ஜனநாயக வழியில் தொடர்ச்சியாக போராடி வந்தனர். அந்த நீண்ட நாள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிஇதுவாகும்.
இந்த வழக்கில் 7 தமிழர்களின் விடுதலைக்காக துவண்டுவிடாமல் கடைசிவரை போராடியவர்களும், சிறப்பாகசட்டப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களும், இந்த சட்டப் போராட்டத்தில் பேருதவியாக அமைந்த தமிழகஅரசின் வழக்கறிஞர்களும், நடுநிலையுடன் சட்டத்தின் பிரகாரம் மாநில அரசின் உரிமையை காக்கும் வகையில்தீர்ப்பை வழங்கிய மாண்புமிகு நீதியரசர்களும் பாராட்டுக்குரியவர்கள் ஆவர்.
ஏழு தமிழர்களின் விடுதலை கோரிக்கை என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையாகும். பேரறிவாளன்விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு ஆதரவாக ஒன்றிய அரசு பல்வேறு சட்ட நுணுக்கங்களை காரணம்காட்டி தடை ஏற்படுத்த முனைந்தாலும், அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவு மாநில அரசுக்கானசிறப்புரிமையை கொண்டது என்றும், ஆளுநர் இதற்கு கட்டுப்பட்டவர் என்பதையும் உறுதி செய்துள்ளது.
இதன்மூலம் வானளாவிய அதிகாரம் கொண்டவர்களாக தங்களை கட்டமைத்துக் கொண்ட ஆளுநருக்கும், ஒன்றிய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலஅரசின் முடிவே இறுதியானது என்றும், ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதையும் 7 தமிழர்களின்விடுதலை தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆயுள் சிறைவாசிகள் விடுதலையைப் பொறுத்தவரை தற்போது சட்டத்தின் தடையோ அல்லது நீதிமன்றத்தின்தடையோ எதுவும் இல்லை என்பதும், முழுக்க முழுக்க அது மாநில அரசின் கைகளில் மட்டுமே உள்ள மாநிலஉரிமை சார்ந்த விஷயம் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, தமிழக அரசு, தமிழகசிறைகளில் நீண்ட நாள் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளை, அவர்களின்வயதுமுதிர்வு, உடல்நலன், குடும்பச் சூழல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, கருணை அடிப்படையில்விடுதலை செய்ய அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.