இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறிய்ருப்பதாவது;
தமிழ்நாட்டில் உள்ள அரசுத் துறைகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் 10000 காலிப்பணியிடங்கள்டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பட்டு வரும் நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக பணியிடத் தேர்வுகள்நடைபெறவில்லை.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. பணிகளில் 10000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வுகள்நடைபெற்று முடிவுகள் வெளியாகி, சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்துள்ளது. பணியிடத் தேர்வு நடைபெறாதஆண்டுகளை கணக்கிட்டு 30000 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற வேண்டிய நிலையில், வெறும்10000 பணியிடத் தேர்வுகள் மட்டும் நடத்தியிருப்பது ஏற்புடையதல்ல.
அரசு வேலைவாய்ப்புக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களின் நம்பிக்கையில்நிராசையை ஏற்படுத்தும் வகையிலான அரசின் செயல் கண்டனத்திற்குரியது. மேலும், அரசுத் துறைகளில்காலிப்பணியிடங்கள் அதிகரிப்பதால் மக்களுக்கு செல்ல வேண்டிய நலத்திட்டங்களில் பெரும் தடைஏற்படவே வழிவகுக்கும். இவற்றைக் கருத்தில்கொண்டு, பொருளாதாரத்தை மட்டும் காரணங்களாகசொல்லாமல், மக்களுக்கான அரசின் சேவைகள் தங்கு தடையின்றி தொடர அரசுப் பணியிடங்களைமுழுமையாக நிரப்ப வேண்டும். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவைநிறைவேற்ற வேண்டும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக 30000 காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் வகையில்அறிவிப்பு வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.