விஹெச்பி அமைப்பின் ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு கண்டனம் – நெல்லை முபாரக்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த முன்னாள் மாநில நிர்வாகி ஆர்.பி.வி.எஸ். மணியன் பேசும்காணொளி ஒன்றில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய அரசியல்சாசன சிற்பி டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவதூறு செய்ததோடு, மிகவும் மோசமான முறையில்ஒருமையில் விமர்சித்துள்ளார். மட்டுமின்றி, திருவள்ளுவர் குறித்தும் ஒருமையில் பேசியுள்ளார். அதோடுபட்டியலின சமூகங்கள் குறித்து சாதி ரீதியாகவும் அவர் இழிவாகப் பேசியுள்ளார். ஆன்மிக பேச்சாளர் என்கிற போர்வையில் ஆர்.பி.வி.எஸ். மணியனின் பேசிய இந்த மோசமான காணொளி சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றன.  தேசம் போற்றும் அம்பேத்கர் குறித்தும், தமிழர்கள் போற்றும் திருவள்ளுவர் குறித்தும்மிகவும் இழிவாக பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த ஆர்.பி.வி.எஸ். மணியனை பெயரளவுக்குகைது செய்து விட்டுவிடாமல், அவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைக்கவேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், அவர் பேசிய அந்தகாணொளியை சமூக வலை தளங்களிலிருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமீபகாலமாக அம்பேத்கர் தொடங்கி, சமூக நீதிக்காக உழைத்திட்ட தலைவர்கள் மற்றும் சமூகங்களைகுற்றப்படுத்தியும், அவர்களை இழிவுப்படுத்தும் போக்குகளைக் கொண்டும் தமிழகத்தில் அரசியல் செய்யும்நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. பாஜகவின் எச்.ராஜா போன்றவர்கள் தந்தை பெரியார் குறித்துதொடர்ந்து கொச்சையாக இழிவுப்படுத்தி வருகிறார். இத்தகைய போக்கை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமே இத்தகைய போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதால், எல்லோருக்கும் பொதுவான சமூகநீதி அரசு, இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு எதிராக பாரபட்சமின்றிகடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.