செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்திற்கு உட்பட்ட குரோம்பேட்டை, நெமிலிச்சேரி அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் புல எண் 5/2 – 1.49 ஏக்கர் மற்றும் புல எண். 6/3 – 0.58 ஏக்கர் என மொத்தம்ரூ.15 கோடி மதிப்புள்ள 2.02 ஏக்கர் நிலத்தில் பல வருடங்களாக11 நபர்களால் வணிக நோக்கத்தில் ஆக்கிரமிப்புசெய்யப்பட்டுடிருந்தது. கடந்த 2017 ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2018-ம் ஆண்டு வெளியேற்று உத்தரவு பிறப்பிக்கபட்டது.
அதன் தொடர்ச்சியாக, மேற்படி நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற சென்னை மாண்புமிகு உயர்நீதி மன்றம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் இணை ஆணையரின் உத்தரவின்படி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்று (28.06.2021) இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அமைச்சர் த.மோ.அன்பரசன் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சக்திமற்றும் பணியாளர்கள் ரூ.15 கோடி மதிப்புள்ள 2.02 ஏக்கர் பரப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை திருக்கோயில் வசம் கொண்டுவந்தனர்.