சிவகங்கை கெளரி விநாயகர் கோவிலின் ஆக்கிரபிப்பு நிலங்களை மீட்டெடுக்க ஆய்வு

தமிழ்நாடு முதலவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சிவகங்கை மாவட்டம் காஞ்சரங்கால் கிராமம் அருள்மிகு கௌரி விநாயகர் திருக்கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை விரைவாக மீட்பது குறித்து (20.06.2021) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார்கள்இந்த ஆய்வின் போது கௌரி விநாயகர் திருக்கோயிலுக்கு சொந்தமான 142 ஏக்கர் நிலங்களில் 96 ஏக்கர் தனியார் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளதை மாவட்ட வருவாய் அலுவலர் விரைவாக ஆய்வு செய்து,  தனியார் பெயரில் பட்டா உள்ளதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தனியார் பெயரில் உள்ள அனைத்து நிலங்களையும் கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் உடனடியாக செய்ய அனைத்து வகையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும்தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதிருக்கோயிலுக்கு சொந்தமான மீதமுள்ள 46 ஏக்கர் நிலத்தில் அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டுமானங்கள் தடுத்து நிறுத்தப்படும்மேற்கண்ட இடத்தில் மின் இணைப்பு பெற அனுமதி வழங்கியவர்கள் மீதும் சட்டப்படி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலம் வருவாய்த்துறைநில அளவைத் துறைஇந்து சமய அறநிலையத்துறைகாவல் துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைத்து திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும்அலுவலர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது முன்னாள் அமைச்சர்  மு. தென்னவன்மாவட்ட ஆட்சியர்  ப. மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப.இந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை மண்டல இணை ஆணையர் முனைவர் . தனபால்உதவி ஆணையர் ஜி. செல்விதிருக்கோயில் செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில்  திருக்கோயில்களில் பணியாற்றும் முழு நேர ஊதியம் பெறாத அர்ச்சகர்பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கலைஞர் பிறந்த நாளையொட்டி இன்று (20.6.2021) நடைபெற்ற விழாவில் மாண்புமிகு   இந்து   சமய   அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு அவர்கள் 197 நபர்களுக்கு ரூபாய். ஆயிரம் உதவித்தொகை, 10கிலோ அரிசி, 15 வகையான மளிகை பொருள்கள் வழங்கினார். இவ்விழாவில் பரமக்குடிசட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.முருகேசன்முன்னாள் அமைச்சர்கள் திரு. சுப. தங்கவேலன், டாக்டர். சுந்தராஜன் சிவகங்கை மண்டல இணை ஆணையர் முனைவர் ந.தனபால் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.