தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது நிர்வாக பகிர்வு வசதிக்காக மாவட்டங்கள் பல பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 15க்குள் புதிதாக பிரிக்கப்பட்டு உருவான 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.இதனால் உள்ளாட்சி தேர்தல் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.