ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபடுனெ அறிவித்தார் ஸ்டாலின்

முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,  மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசி அவர்கள், மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து எடுத்துச் சொல்லி, அவற்றைத் திரும்பப் பெறக்கூடிய வகையில், ஒரு தீர்மானத்தை இந்த அவையிலே நிறைவேற்ற வேண்டுமென்று ஒரு கோரிக்கையை இங்கே வைத்திருக்கிறார்கள். இந்த வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், உழவர் நலனுக்கு எதிரான இந்தச் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம்பல்வேறு தருணங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பதை நீங்கள் அனைவரும் நன்றாகஅறிவீர்கள்.ந்த வகையில், தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ள உழவர் பெருமக்களின் உணர்வுகளையும், விருப்பத்தையும் இந்த மன்றம் முழுமையாக பிரதிபலிக்கக்கூடிய வகையில், இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்த அவையிலேஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற இந்த அரசு தெளிவாக முடிவு செய்திருக்கிறது.    அதில் எந்த மாற்றமும் கிடையாது.  ஆனால், இந்த அவையினுடைய முதல் கூட்டத் தொடர் என்ற முறையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, இத்தகைய தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றுவது உகந்ததாக இருக்காது என்று கருதுகிற காரணத்தினால்தான், வரவிருக்கக்கூடிய வரவு-செலவுத் திட்டக் கூட்டத் தொடரின்போது, அந்த உரிய தீர்மானத்தைக் கொண்டுவந்து, நிச்சயமாக ஒன்றிய அரசினுடைய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழ்நாடுஅரசினுடைய எதிர்ப்பை முழு மூச்சோடு பதிவு செய்து, அவற்றைத் திரும்பப்பெற ஒன்றிய அரசைவலியுறுத்துவோம் என்பதை நான் உறுதியோடுதெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். அதைப்போலவே, இன்னொன்று – ஒன்றிய அரசு கொண்டுவந்திருக்கக்கூடிய குடியுரிமை திருத்தச் சட்டமும் நாடு முழுவதும் இருக்கக்கூடியசிறுபான்மையினரின் நலனை வெகுவாக பாதித்து, அவர்களிடத்திலே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், அதனையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துவதற்கான தீர்மானத்தையும் வரவிருக்கக்கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்பதையும் தெரிவித்து, அமைகின்றேன்.