தினசரி வாழ்க்கையில் புள்ளியியலின் முக்கியத்துவத்தைஎடுத்துரைக்கவும், கொள்கைகளை வடிவமைப்பதில் புள்ளிவிவரங்கள் எவ்வாறு உதவிகரமாக இருக்கிறது என்பதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும்மறைந்த புள்ளியியலாளர் பேராசிரியர் பி.சி. மஹாலனோபிஸ்–இன் பிறந்த நாளான ஜூன் 29-ஆம்தேதியை “புள்ளியியல் தினமாக” மத்திய அரசு கொண்டாடிவருகிறது. கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக புள்ளியியல்தினம் 2021-ஐ காணொலிக் காட்சி வாயிலாக மத்தியபுள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் கொண்டாடியது. அமைச்சகத்தின் பல்வேறு சமூக ஊடகங்களிலும் நிகழ்ச்சிநேரலையாக ஒளிபரப்பப்பட்டது. நிலையான வளர்ச்சிஇலக்கு-2 (பட்டினியை போக்குதல், உணவு பாதுகாப்புமற்றும் மேம்பட்ட ஊட்டச்சத்தை எட்டுதல், நிலையானவேளாண்மையை ஊக்குவித்தல்) என்பது தேசிய புள்ளியல்தினம் 2021-இன் கருப்பொருளாகும். மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கம் மற்றும் திட்டத்துறைஇணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ராவ் இந்தர்ஜித்சிங்இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு காணொலி வாயிலாக உரையாற்றினார். அமைச்சகத்தால் வழங்கப்படும் தேசிய விருதுக்குத தேர்வுபெற்றவர்கள் அறிவிக்கப்பட்டு, நிகழ்ச்சியின் போதுஅவர்கள் மெய்நிகர் வாயிலாக கௌரவிக்கப்பட்டார்கள். வாழ்நாள் சாதனைக்கான அதிகாரப்பூர்வபுள்ளிவிவரங்களுக்கான பேராசிரியர் பி.சி. மஹாலனோபிஸ்தேசிய விருது 2021, தேசிய புள்ளியியல் ஆணையத்தின்முன்னாள் தலைவர் டாக்டர் ஆர் பி பர்மனுக்கு அளிக்கப்பட்டது. 45 வயதிற்கு மேற்பட்ட பணியில் உள்ளஅதிகாரபூர்வ புள்ளியியல் நிபுணர் என்ற பிரிவில் பேராசிரியர்பி.சி. மஹாலனோபிஸ் தேசிய விருது 2021, சென்னைகணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் சிதப்ராசின்ஹாவுக்கு வழங்கப்பட்டது. இளம் புள்ளியியல் நிபுணர்களுக்கான பேராசிரியர் சி ஆர்ராவ் தேசிய புள்ளியியல் விருது 2021, கொல்கத்தா இந்தியபுள்ளியியல் நிறுவனத்தின் இணை பேராசிரியர் டாக்டர்கிரண்மாய் தாஸுக்கு அளிக்கப்பட்டது.