விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவு தகவலின் அடிப்படையில், எமிரேட்ஸ் விமானம் ஈகே 544 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய, சென்னையை சேர்ந்த முகமது அபுபக்கர் ஜெய்னுலாபிதீன், 62, என்பவர், வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். கேள்விகளுக்கு முன்னுக்கு பின்னாக அவர் பதிலளித்ததை தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவரது கால்சட்டையின் உட்புற பையில் இருந்து 465 கிராம் எடையுடைய வெளிநாட்டு முத்திரை கொண்ட 4 தங்க கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டு, சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட்து. இதன் மதிப்பு ரூ 19.78 லட்சம் ஆகும். இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.