எளிதான, குறைந்த செலவில், உயிரி– இணக்கமுடைய, ஒளிஊடுருவும் நேனோ மின்னியற்றியை விஞ்ஞானிகள்உருவாக்கியுள்ளார்கள். ஒளி மின்னணுவியல், சுயமாகஇயங்கும் உபகரணங்கள் மற்றும் இதர உயிரி மருத்துவசெயல்முறைகளில் பயன்படுத்தும் வகையில் சுற்றியுள்ளஅதிர்வுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும்வகையில் இந்த நேனோ மின்னியற்றி தயாரிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமடைதல், எரிசக்தி பற்றாக்குறை முதலியஅச்சுறுத்தல்களால், கரியமில வெளியீடுகள் குறைவாகஇருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களின் தேவைஅதிகரித்துள்ளது. தொடு திரைகள், மின்னணு காட்சிமுறைகள் முதலிய கருவிகளில் மரபுசாரா முறையில்மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும்பெங்களூருவில் உள்ள நானோ மற்றும் மென்மையானபொருள் அறிவியல் மையத்தைச் சேர்ந்த டாக்டர் சங்கர் ராவ்மற்றும் அவரது குழுவினர், டாக்டர்ஸ் பிளேட் என்றதொழில்நுட்பத்தில் தெர்மோபிளாஸ்டிக் பாலியூரிதீன், பாலிஎதிலீன் டெரிஃப்தலேட்டைப் பயன்படுத்தி இந்தடிரைபோ மின்னணு நேனோ மின்னியற்றியைவடிவமைத்துள்ளனர்.மென்மையாக கைகளைத் தட்டுவதன் மூலம் 11 எல்இடிவிளக்குகளுக்கு இந்த உபகாரணத்தால் ஒளியூட்ட முடியும்.