கருவாச்சி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான மாடத்தி திரைப்படம் ஜூன் 24 அன்று வெளியாகிறது.

18 ஜூன்2021:லீனா மணிமேகலை இயக்கிய மாடத்தி திரைப்படத்தின் முன்னோட்டம்/Trailer சினிமாஇலக்கியம்கலைஅரசியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தஆளுமைகளால் பிரம்மாண்டமாக வெளியிடப் படுகிறதுஷைலஜா டீச்சர்மஞ்சு வாரியர்பிரித்விராஜ் சுகுமாரன்ஐஸ்வர்யா ராஜேஷ்அஞ்சலி மேனன்கீது மோகன் தாஸ்சேரன்ஆஷிக் அபுபா ரஞ்சித்வசந்தபாலன்சி எஸ் அமுதன்ரீமா கல்லிங்கள்நீரஜ் கய்வான்தமிழச்சி தங்கபாண்டியன்என்எஸ்மாதவன்ரோஹிணிஎஸ்.ஆர்பிரபுடி.எம்கிருஷ்ணாஷோபா சக்தி உட்பட பல கலைஞர்களும்அரசியல் தலைவர்களும்செயல்பாட்டாளர்களும் படை திரண்டு மாடத்தியின் முன்னோட்டத்தை தத்தமது சமூகவலைத் தளங்களில் வெளியிட்டனர்லீனா மணிமேகலை எழுதிஇயக்கிதன் நிறுவனமானகருவாச்சி ஃபிலிம்ஸின் தயாரிப்பில் உருவாக்கியிருக்கும் மாடத்தி ஜீன் 24 முதல் நீஸ்ட்ரீம்ஓடிடி தளத்தில் திரையிடப்பட உள்ளது


ஏதிலிகளுக்குத் தெய்வமில்லைஅவரே தெய்வம்” என்ற மேற்கோளுடன் வரும் இப்படம்தமிழ்நாட்டின் தென்கோடியில், ‘காணத்தகாதோர்‘ என்று அடையாளப்படுத்தப்படும் புதிரைவண்ணார் சமூகத்தைச் சார்ந்த ஒரு பதின்வயது பெண்ணின் பருவ வாழ்க்கையைப்பேசுகிறதுதலித் மக்கள் மற்றும் இறந்தவர்களின் துணிகளையும் மாதவிடாய்துணிகளையும் துவைப்பவர்களான இம்மக்கள் எதிர்கொள்ளும் கொடூரமானஅடக்குமுறைகளை இப்படம் தோலுரிக்கிறதுஇவர்களைப் பார்த்தாலே தீட்டு என்றுகருதப்படுவதால் மற்ற சமூகத்தினர் கண்ணில் படாமல் ஒளிந்து செல்லும் அவலநிலைக்குள்ளாகிய  இம்மக்களின் துயர வாழ்வின் பின்னணியில் பாலினசாதிஅடையாளங்கள்மத நம்பிக்கைகள் மற்றும் வன்முறை ஆகியவற்றை ஆழ்ந்துஅவதானிக்கும் ஒரு உக்கிர தேவதையின் கதை மாடத்தி. இன்று வெளியாகியிருக்கும்முன்னோட்டம்  அடிமைப்பட்டிருக்கும் சமூகத்தில் பிறந்த பெண் எப்படிதனக்கிழைக்கப்பட்ட அநீதியால் உக்கிர தெய்வமாகிறாள் என்ற கதையின் மிகத்துல்லியமான காட்சி குறுக்குவெட்டாய் அமைந்திருக்கிறதுசாதி அடுக்குகளின் கடைசிமனுசியாய் வாழும் ஒரு பெண் சாதியையும் பாலின அடக்குமுறைகளையும் எதிர்கொள்வதை ஒரு பெண்ணின் பார்வை கொண்டு மாடத்தி திரைப்படம் காட்சிப் படுத்தியிருப்பதைமுன்னோட்டம் கட்டியம் கூறுகிறது.


லீனா மணிமேகலை சமூக நீதி குறித்த கருத்துக்களை கவித்துவமான அழகியலுடன்பேசும் கலைப்படைப்புகளுக்காக பெயர் பெற்றவர்.  பலதரப்பட்ட பாணிகளிலான இவரின்படைப்புகள்  உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் பல விருதுகளைப்பெற்றிருக்கின்றனலீனா மணிமேகலையின் சிறந்த  படைப்புகளான  Goddesses (2009), செங்கடல் (Cinema Verite 2011), My Mirror is the Door (2012, Cine Poem), White Van Stories (2015, Feature Documentary) மற்றும் Is it too much to ask (2017, Mockumentary) ஆகியவை இவரை ஒரு தனித்துவமிக்க தனித்திரை ஆளுமையாக நிலைநாட்டி உள்ளன.

 

தென் கொரியாவின் பூசான் திரைப்பட விழாகொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாலத்தீன் அமெரிக்க FICCI 60, Third Eye Asian திரைப்பட விழாசிகாகோ தெற்காசியதிரைப்பட விழா, DC தெற்காசிய திரைப்பட விழா என்று பல முக்கிய திரைப்படவிழாக்களில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் மாடத்தி வெகுவாக கொண்டாடப்பட்டது. FIPRESCI நடுவர் விருதுசிறந்த திரைப்படத்துக்கான தங்க கைலாசா விருது, 2020 அவுரங்காபாத் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகை மற்றும் சிறந்தஒளிப்பதிவாளருக்கான விருதுகள் வென்றதோடு பிரான்ஸ் நாட்டின் லெ ரிம்பாட்விருதுக்கான இறுதி பட்டியலிலும் தேர்வானது மாடத்தி திரைப்படம்.

மாடத்தி படத்தின் திரைக்கதையை லீனா மணிமேகலையுடன் இனைந்து ரஃபிக்இஸ்மாயில் மற்றும் யவனிகா ஸ்ரீராம் எழுதியுள்ளனர்ஜெஃப் டோலென்அபிநந்தன்ராமானுஜம் மற்றும் கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர்கூட்டுநிதியில்(crowd  funding) தொடங்கப்பட்ட இப்படத்தை பின்னர் பியூஷ சிங்(Golden Ratio Films),பாவனா கோபராஜு மற்றும்  அபிநந்தன் ராமானுஜம் இணைந்து தயாரித்துள்ளனர்.  அஜ்மினா காசிம்பேட்ரிக் ராஜ்செம்மலர் அன்னம் மற்றும் அருள் குமார் முக்கியகதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்ட மற்ற கதாபாத்திரங்களாக அச்சமூக  மக்களேபங்கேற்றுள்ளனர்தங்கராஜ் படத்தொகுப்பு செய்ய தபஸ் நாயக் ஒலி வடிவமைப்புசெய்துள்ளார்மோகன மகேந்திரன் கலை இயக்கம் செய்யஇப்படத்திற்கான இசையைகார்த்திக் ராஜா அமைத்துள்ளார்பவிசங்கர் விளம்பர வடிவமைப்பு செய்துள்ளார்திவோநிறுவனம் மாடத்தியின் இசை உரிமையைப் ெற்றிருக்கிறது

சர்வதேச திரைப்பட விழாக்களில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற மாடத்தி இனி உங்கள்திரைகளில் காணலாம்.

மக்கள் தொடர்பு: சதீஷ்