இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 01.01.2021-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு 16.11.2020 முதல் 15.12.2020 முடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய கள விசாரணைக்கு பின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் தகுதியின் அடிப்படையில் 80,095 புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 53,116 வாக்காளர்கள் அவர்களது விண்ணப்ப படிவத்தில் அலைபேசி எண்களை பதிவேற்றம் செய்திருந்தார்கள். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் புதிதாக சேர்க்கப்பட்ட அனைவருக்கும் பிரத்யேகமாக மின்னனு வாக்காளர் அடையாள அட்டை இணையதளம் வாயிலாக பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தில் உரிய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதோடு, ஒவ்வொரு புதிய
வாக்காளர்களும் இணையதளம் மற்றும் அவர்களது அலைபேசி மூலமாக எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்நாள் வரை வாக்காளர்கள் மட்டுமே மின்னனுவாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்துள்ளனர். மீதமுள்ள 50,013 வாக்காளர்கள் நாளது தேதி வரை அவர்களது மின்னனு வாக்காளர் அட்டை பதிவிறக்கம் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உயர்கல்வி மற்றும் இணையதள பயன்பாடு இந்திய அளவில் வெகுவாக முன்னேறிய மாநிலமாக திகழந்து வரும் சூழ்நிலையில் குறைந்த எண்ணிக்கையிலேயே இளம் வாக்காளர்கள் மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யபப்பட்டுள்ளதாகவும், 2021-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று முடிவடைந்த
5மாநிலங்களில் தமிழ்நாடு மாநிலத்தில் மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் குறைவாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே சிறப்பு சுருக்கமுறை திருத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் இந்திய தேர்தல் ஆணைய இணையதள முகவரியான www.nvsp.in மற்றும் Voter Help Line Mobile App என்ற செயலி ஆகியவற்றின் மூலம் பதிவிறக்கம் செய்து, தமிழகத்திற்கும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கும் நற்பெயர் ஈட்டித்தர நல் ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.