படப்பிடிப்பில் சுற்றிலும் ஆண்கள் கூட்டத்தின் நடுவே தான் மட்டுமே ஒரு பெண்ணாக நடித்தது குறித்து லாக்கர் பட நாயகி நிரஞ்சனி வெளிப்படையாகப் பேசினார். தமிழில நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இரட்டையர்கள் இணைந்து ‘லாக்கர் ‘என்றொரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள். இவர்கள் இருவருமே சினிமாவின் மீது தீராதகாதல் கொண்டவர்கள். இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார் . கதாநாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார். கதாநாயகி நிரஞ்னி அசோகன் பேசும்போது, இந்தப் படப்பிடிப்பில் சுற்றிலும் ஆண்கள் கூட்டம் இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் நான் ஒருத்தி மட்டும்தான் பெண். இருந்தாலும் அந்த பாலினபேதம் ஏதும் உணரத் தோன்றாமல் சௌகரியமாக பாதுகாப்பாக உணர்ந்தேன். இப்படி ஒரு நல்லதொரு அனுபவம் இந்தப் படத்தின் மூலம் கிடைத்தது. *******
“எனது குறும்படத்தைப் பார்த்து விட்டுத் தான் இந்த லாக்கர் பட வாய்ப்பு வந்தது. இன்ஸ்டாகிராம் மூலம்தொடர்பு கொண்ட போது முதலில் நான் நம்பவில்லை. ஏனென்றால் நிறைய போலிகள் உலா வருகிற காலம்இது. உண்மையாக இருக்குமா என்று நான் சந்தேகப்பட்டேன். அவர்களின் அலுவலகம் சென்றபோது எனக்கு இரண்டு விஷயங்கள் பிடித்தன .ஒன்று அவர்கள் கதை விவரித்தவிதம் எனக்கு மிகவும் பிடித்தது. அவ்வளவு அருமையாக இருந்தது. அடுத்தது முதல் படத்திற்காக அவர்களதுமுன் தயாரிப்பு ஆச்சரியப்பட வைத்தது. எல்லாவற்றையும் தெளிவாகத் திட்டமிட்டு வைத்திருந்தார்கள். அதேபோல் தான் படப்பிடிப்பும் நடந்தது .படம் திறந்தவெளியில் படமாக்கப்படுகிற போது கூட பருவ காலநிலை மாற்றத்தால் திடீரென்று மழை வரும். ஆனால் அதைக் கண்டு மிரண்டு விடாமல் அதற்கு ஒரு மாற்றுத்திட்டம் வைத்திருந்தார்கள். இப்படி மிகவும் சரியாகத் திட்டமிட்டு வைத்திருந்தது எனக்கு ஆச்சரியமூட்டியது. எல்லோருக்கும் முதல் படம் என்கிற போது ஒரு அழுத்தம் இருக்கும். அந்த அழுத்தம் தெரியாத அளவிற்குஅவர்கள் துல்லியமாகத் திட்டத்துடன் இருந்தார்கள் .ஒளிப்பதிவாளர் தாஸ் எனக்கு தனிப்பட்ட முறையில் நான்திரையில் நன்றாகத் தெரிய வேண்டும் என்று கவனத்துடன் அறிவுரைகள் சொல்வார்..
ஸ்டண்ட் மாஸ்டர் சுரேஷ் இதில் ஒரு பாம் ப்ளாஸ்ட் காட்சி எடுக்கும் போது ரியலாக எடுத்தார். ஆனால் அதைஎடுக்கும்போது பாதுகாப்பு விதிகளைச் சரியாகக் கடைபிடித்தார். யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக மிகவும் அக்கறையாக செயல்பட்டார் .பாம் சப்தம் வந்து காது பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக காதுகளில் பஞ்சு வைத்துக்கொள்ளச் சொன்னார்.நாயகன் விக்னேஷ் சண்முகம் உடன் நடிக்கும்சக நடிகராக எனக்கு செளகரியமாக இருந்தார்.படக்குழுவினர் யாரும் ஈகோ பார்க்கவில்லை.
அதை நினைத்துமகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருமே நல்ல பங்களிப்பைக் கொடுத்துள்ளார்கள். இந்த படத்தைத் தயாரித்ததயாரிப்பாளர்களுக்கும் இதை சரியான முறையில் விநியோகம் செய்யும் ஜெனிஷ் அவர்களுக்கும் நன்றி” என்றார். விழாவில் படத்தின் ட்ரெய்லரை படக் குழுவினர் வெளியிட, உதவி இயக்குநர்கள் பெற்றுக் கொண்டார்கள்.படம்முழுக்க உழைக்கும் உதவி இயக்குநர்கள் மீது பாராமுகம் காட்டும் திரையுலகில் இது ஒரு புதிய முன்னுதாரணமாக இருந்தது.