பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்த நாள் விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 01.11.2021 – திங்கட் கிழமை இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமம், தேவர் திருமகனார் அவர்களின் நினைவிடத்தில் உள்ள, அவரது திருஉருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன், கழக அமைப்புச் செயலாளர்
ஜக்கையன், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் மு. ராஜூ, கழக புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் முனியசாமி, சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் செந்தில்நாதன், உள்ளிட்ட, கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் ஓ.பி.எஸ்.
