சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்ததையொட்டி, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சைதைதுரைசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, வெற்றி துரைசாமி படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.