பி.ரானச்சந்திரன் இயக்கத்தில் பால சரவணன், காயத்திரி ஷங்கர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் பேய் படம் “பேச்சி”. பேய் படத்திற்கு இலக்கணம் தேவையில்லை. இருளும், நூலாமட்டையும், சிலந்திவலை பிண்ணலும், பாழடைந்த பங்களாவும் இருந்தால் போதும். அங்கு பேய்கள் குடியிருந்து கொள்ளும். ஆனால் இந்த பேச்சி திரைப்படம் சற்று வித்தியாசமானது. அரண்மனைக்காடு என்ற ஒரு மலைக்கிராமம் இருக்கிறது. வனத்துறையின். சுற்ற்லாத்தளமாக இருக்கும் அந்தக்காட்டுக்குள் இரண்டு இளம் பெண்கள் உள்பட 5 பேர் சுற்றுலாவுக்கு வருகிறார்கள். சுற்றுலா வழிகாட்டியாக அக்கிராமத்தை சேர்ந்த பாலசரவணனும் வருகிறார்கள் வனப்பகுதியின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் “இது தடை செய்யப்பட்ட பகுதி” என்று ஒரு மரப்பலகையில் எழுதி வைத்திருக்கிறார்கள். சில மணிகளையும் கட்டி தொங்கவிட்டிருக்கிறார்கள். சுற்றுலாப்பயணிகள் அந்த இடத்துக்குள் நுழைய முற்சிக்கிறார்கள். அவர்களை பாலசரவணன் தடுக்கிறார். உள்ளே போனால் திரும்ப வரமுடியாது. செத்துவிடுவீர்கள் என்று எச்சரிக்கிறார். அதைகேட்காமல் ஐவரும் மணியை தாண்டி காட்டுக்குள் சென்றுவிடுகிறார்கள். அவர்களை காப்பாற்ற வழிகாட்டியாக வந்த பாலசரவணனும் உள்ளே சென்றுவிடுகிறார். உள்ளே என்ன நடக்கிறது?, ஒவ்வொருவராக ஏன் சாகடிக்கப்படுகிறார்கள், பேச்சி என்பவள் யார்? என்பதுதான் கதை. அச்சம் கொள்ளும் விதத்தில் பின்னணி இசை. மாயாசால அமானுஷ்யங்கள் என பிரமிப்பூட்டும் வகையில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராமச்சந்திரன். பேச்சி யார் என்பதை பற்றி பாலசரவணன் விளக்கி கூறும்காட்சி வித்தியாசமானது.