சந்தானத்திற்கு பொறுப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது” – மன்சூர் அலிகான்

பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம்கிக்கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ். இயக்கியுள்ளார். தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, மேலும் ராகினி திவிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது, “சந்தானம் சும்மா ஒரு கதாநாயகனாக உருவாகவில்லை. உடலை வருத்திக்கொண்டு, அதற்காக தன்னை தயார்படுத்தி கொண்டவர். நாங்கள் எல்லாம் படப்பிடிப்பில் விதவிதமாக சாப்பிடும்போது தயிர் சாதம் மட்டும்தான் சாப்பிடுவார் சந்தானம். டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றியை சொல்லி அடித்தார். அதேபோல இந்த கிக் படமும் மிகப்பெரிய வெற்றி பெறும்.. நாளுக்கு நாள் சந்தானத்திற்கு பொறுப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறதுஎன்று கூறினார்*****

நடிகர் தம்பி ராமையா பேசும்போது, “ஒருமுறை முடிவை எடுத்து விட்டால் அதிலிருந்து மாறக்கூடாது எனகவிஞர் கண்ணதாசன் சொன்னது போல தான் எடுத்த முடிவில் மாறாமல் இருக்கிறார் சந்தானம். சிலபேர்எப்போதும் தோற்கவே கூடாது என மக்கள் நினைப்பார்கள். அப்படி ஒருவர் தான் சந்தானம். டிடி ரிட்டன்ஸ்கொடுத்த வெற்றி இங்கே அனைவரின் முகத்திலும் தெரிகிறது. இயக்குநர் பிரசாந்த் ராஜ் நகைச்சுவைகாட்சிகளை பிரமாதமாக வடிவமைத்துள்ளார். இந்த படத்தில் ஆணழகன் போல சந்தானம் காட்சியளிக்கிறார். ஹிந்தி படம் போல ஒரு தமிழ் படமாக இந்த கிக் உருவாகி இருக்கிறது. சந்தானம் தான் மட்டும் ஸ்கோர் செய்யவேண்டும் என விரும்பாமல் தன்னை சுற்றியுள்ள அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து அழகு பார்ப்பவர்என்றார்.