குழந்தைகளுக்கு முத்தமழை பொழிந்த பார்த்திபன்

அன்பு இல்லம் மற்றும் ஹோப் பப்ளிக் சாரிடெபுள் டிரஸ்ட் குழந்தைகளுடன் டீன்ஸ் படத்தின் நன்றி விழா கொண்டாடிய இயக்குனர் ஆர்.பார்த்திபன் இயக்கிய ப்வித்தியாசமான கதை, திரைக்கதை, வசனம் எழுதி பதிமூன்று குழந்தைகள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உலகமெங்கும் கடந்த 12 -ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டே நாட்களில் அதிகதிரையரங்கில் அதிக காட்சிகளுடன் உலகமெங்கும் வெற்றிநடை போடுகிறது. இதனை முன்னிட்டு அன்பு இல்லத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் சென்னை காசி  திரையரங்கில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் இசையமைப்பாளர் டி.இமான் இயக்குநர் பிரபு சாலமனுடன் பார்திபம் படத்தை பார்த்தார். இதில் நடித்த 13 சிறுவர்களுக்கும் வெகுமதியாக அன்பு முத்தங்களை பரிசளித்தார் பார்த்திபன்*******

நீண்ட நாட்களுக்கு பிறகு குழந்தைகளுக்காக குடும்பத்தினருடன் ரசிக்கும் படி படம் எடுத்த இயக்குனர் பார்த்திபனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். படம் கதை அம்சத்தோடு technical -ளாகவும் பிரமிக்க வைக்கிறது என இயக்குனர் பிரபு சாலமன் தெரிவித்தார். நல்ல கதையம்சத்தோடு எந்த காலகட்டத்தில் வெளியானாலும் மக்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கு TEENZ படம் ஒரு உதாரணம் என நடிகர், இயக்குனர் பார்த்திபன் நெகிழ்ந்தார்.