*வயது பதினெட்* டடைந்தவர்கள்
*வாக்க ளிக்கும் உரிமைதனை*
முயன்று பெற்றுத் தந்தவர்கள்
*மூடா கட்சித் தலைமையினர்*!
வயது பதினெட் டானவர்கள்
வாக்கோ மூடா கட்சிக்குத்
தயைதாட் சணியத் திற்கான
தகுதிக் காகவும் கிடைக்கவில்லை !
*வைப்புத் தொகையை* இழந்ததுதான்
வரவாய்ப் பெற்றே அக்கட்சி
கைப்புத் துன்பம் கண்டதுவே
காலம் தந்த கோலமெனச்
சப்புக் கொட்டிச் சொலயார்க்கும்
தகுதி இல்லை என்பதுதான்
இப்போ(து) அவர்கள் எண்ணத்தில்
இருக்க வேண்டிய கருத்தாகும் !
சிறுவய தாரிடும் வேளாண்மை
திரும்பி வீடு வாராது !
பெரியோர் சொன்ன வார்த்தையிது
பெரிதாய் பலித்துப் போனதுவோ !
சிறுவய தான வாக்காளர்
திறனும் முதிர்ச்சியும் இலாரென்னும்
அரிய உண்மை உணர்த்தினரோ !
அதைநாம் ஆய்வு செய்திடுவோம் !
*மதமும் , கெண்டகி சிக்கனும்தான்*
வயது பதினெட் டார்மாறி
அதிவிரை வாக, முடிவெடுத்தே
அவசரத் துடனே வாக்களித்தே
சிதைத்தார் *மூடா எதிர்பார்ப்பை ;*
*சிந்தனை* தன்னை என்பதுவோ !?
எதுவென் றாலும் அடுத்துவரும்
பொதுத்தேர் தல்தான் பதில்கூறும் !
*பாதாசன்*
*
*அரும்பொருள் விளக்கம்*
கைப்பு : கசப்பு
வேளாண்மை : விவசாயம்