*கோமதியின் மாணவர்போல்* *மகிழம்பு தமிழ்ப்பள்ளி மாணவியும்.

*அனைத்துலகப் புத்தாக்கப்* போட்டி ஒன்றில்

      அனைவரையும் வென்று *முதல் பரிசு தங்கம்*

தனக்கென்று பெற்ற *கபி நயா* என் கின்ற

      தமிழ்ப்பள்ளி மாணவியே *வாழ்க , வாழ்க ;*

மனம்விரும்பும் *மகிழம்பு தமிழப் பள்ளி*

      மாணவர்கள்,ஆசிரியர், பெற்றோ ருக்காய்

தினச்செய்தித் தாள் *மக்கள் ஓசை* இன்று

     தெம்பூட்டும் *படச்செய்தி*  வெளியிட் டுள்ளார் !

மகிழம்பு தமிழ்ப்பள்ளி   மாண விக்கு

      வாய்த்திட்ட இப்பரிசால் பள்ளி சார்ந்தோர்

மகிழ்ச்சியிலே திளைத்துள்ளார் ! எனினும் , அந்த

     மகிழம்பு பள்ளியினைத் தம்கண் போல

மிகப்பொறுப்பாய்ப் பராமரித்த *டத்தோ தஸ்லீம்*

       மேலுலகில் இருந்துகொண்டு *கபிந யாவை*

அகப்பூர்வ மாய்வாழ்த்தி மகிழ்வார் என்றே

       அப்பள்ளி சார்ந்தவர்கள் உணர்வார் ; உண்மை !

மண்ணில்வாழ்ந் திருந்திட்ட போதே இந்த

      மகிழம்பூ தமிழ்ப்பள்ளி யோடு மற்றத்

தன்னிகரில் லாதசில சுற்று வட்டத்

      தமிழ்ப்பள்ளிக் காதரவாய் இருந்து வந்த

பொன்னிகர்த்த மனம்கொண்ட *டத்தோ தஸ்லீம்*

      புகழ்கூறக் *கபிநயா* வெற்றி உண்டே !

கண்ணிகர்த்த தமிழ்மொழியின் வளர்ச்சிக் காகக்

       காலமறிந் துதவியவர் *தஸ்லீம்* வாழ்க !

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அண்மை நாளாய்

       தரணியள வில்நடக்கும் போட்டி தம்முள்

தமிழினத்தார் பெருமையுறும் வண்ணத்தோடும்

    தம்நாடு *மலேசியமும்* சிறக்கு மாறும்

இமைவிரிய உலகளவில் பரிசு பெற்றே

      இனிப்பூட்டி வருவாருள் முதலி டத்தில்

அமைந்த *கோ மதி* அவர்தம் மாண வர்கள்

      அணுகுவழி தொடருமனை வருமே வாழ்க !

                                                                    *பாதாசன்*