**ஐயய்யோ ! ஐயய்யோ ! ஐயய்யோ !*
*அரிசிவிலை* ஏறிடுச்சே ஐயய்யோ !
மெய்யான செய்தியிதே என்றிட் டாலே
மேன்மேலும் பலபொருள்கள் விலைக ளெல்லாம்
ஐயமின்றி உயர்ந்திடுமே ஐயய்யோ !
அதைத்தாங்க முடியலையே *ஏ,ஏ சாமீ !*
பொய்யான செய்தியிதாய்ப் போகா தாமோ !
பொங்கல்வைத்து வேண்டுகிறோம் *ஏ,ஏ சாமீ !*
*பொங்கல்வைத்தே* என்றாநான் சொல்லி விட்டேன் !
பொறுத்தருள்க ஓ,சாமி பொறுத்த ருள்க !
பொங்கல்வைக்க அரிசிவிலை ஏறிப் போச்சே !
பொசுக்கென்றே ஏறியதால் மன்னிப் பீரே!
ஜிங்குஜிங்னு ஏறிவிலை ஆடு தையா !
சிரிப்பாகச் சிரிகுதையா வறுமைப் பேயும் !
எங்கிருந்தே அரிசிவிலை ஏறி டிச்சோ ?
என்னஅதன் காரணமோ புரிய லையே ?
அக்காலம் *ஆண்டெழுப துகளில்* ஏதோர்
ஆண்டில்தான் அரிசிவிலை ஏறிப் போன
அக்கணமே பலபொருள்கள் விலைகள் யாவும்
அதிரடியாய் ஏறியதைக் கண்ட வர்நாம் !
இக்காலம் அரிசிவிலை எகிறிப் போக
இயல்பாகப் பொருள்விலைகள் ஏறித் தீரும் !
இக்கோலம் மக்களுக்கே அலங்கோ லம்தான் !
எப்போது சீர்பெறுமோ நம்கா லம்தான் ?
தென்னைமரத் தில்தேளும் கொட்டி விட்டால்
பனைமரத்தில் நெரிகட்டும் என்னும் பேச்சும்
தென்னைமரந் தனில்தேளும் கொட்டி விட்டால்
தென்னைமரம் தனில்அன்றே தேள்கொட் டும்தான்
என்னஅதும் மாறிவிடும் என்ப தாக
இன்றரிசி விலையுர்ந்த(து) என்னும் போது
உண்பொருள்கள் விலையனைத்தும் ஏறும் என்னும்
உண்மைதனை நினைக்கையிலே பதறும் நெஞ்சே !
*பாதாசன்*