*தமிழ்ப்பள்ளி நமது தேர்வு* எனத் *தெரியாமல் தமிழ் படிக்கும் மலாய் பெண்


*
தமிழ்ப்பள்ளி நம்தேர்வு* எனப்பல் லாண்டாய்த்

       தமிழர்களே தமிழரிடம் சொல்லு கின்றோம் !

தமிழ்ப்பள்ளி நம்தேர்வுமுழக்கத் தையே

     சரியாகப் புரியாத *மலாய்ப்பெண் பெற்றோர்*

தமிழ்ப்பள்ளி யில்  *மகளைப்* படிக்க வைத்தார் !.

     *மகளும்தன் பிள்ளை,தமிழ் கற்க வைத்தார் !*

தமிழர்களே ! இதைநன்கு  சிந்திப் பீரே ;

   *தமிழை,மலாய் வெறுக்கவிலை* இதுதான் செய்தி !

*மலாய்,தமிழை மறுக்கவிலை* என்ப தையும்

       மலாய்ப்பெண்ணின் தமிழ்ப்படிப்பு *உறுதி செய்யும் !*

மலாயர்களும் தமிழர்களும் *உடன்பி றப்பாய்*

   மலையகத்தில் பல்லாண்டாய்ப் பலதோட் டத்தில்

குலாவிமகிழ்ந் திருந்தகதை தெரிந்த வர்கள்

     கொடுப்பார்கள் மலாய்தமிழ்க்கே *மதிப்பை* நாளும் !

*நிலாச்சோறு* மலாய்தமிழும் தோட்டத் தில்தான்

        நிறைவாகப் பகிர்ந்துண்ட கதையும் பொய்யோ ?

         

தமிழ்படித்தோம்என்பதற்காய் மலாய்ப்பெண் தன்றன்

       *தாய்மொழியாம் மலாய்* அதனை வெறுக்க வில்லை !

*தமிழ்வேண்டும்* எனக்கேட்கும் *தமிழர்* கூடத்

       தங்களுக்கு மலாய்மீது *விருப்பம்* என்பர் !

தமிழ்மலாயும், மலாய்தமிழும் *ஒன்றை ஒன்று*

      *தழுவிநட்புக்* கொண்டிடவே விரும்பும் போது

தமிழிங்கே ஒற்றுமையைக் *குலைக்கும்* என்றே

       தவறாகக் கூறுவதை நிறுத்த வேண்டும் !

தோட்டத்தில் வாழும்மலாய்தமிழர்சீனர்

       *தோழர்களாய் வாழ்பவர்கள்* எனும்உண் மையை

நாட்டவர்க்குச் சொலவேண்டும் என்றே எண்ணி

      நம்நாட்டு *சிவாஜி ரம்லி* தம்ப டத்தில்

ஊட்டச்சத் தாய்நமக்கே *ஊட்டிச்* சென்றார் !

      *உண்மையிதை* மறந்துவிட்டோ மறுத்து விட்டோ,

காட்டுகிறார் *இனமதத்து* வெறுப்பை இஃதைக் !

       கண்டிருந்தால் *ரம்லி* இன்று கண்ணீர் பெய்வார் !

தமிழ்,மலாயைக் கற்கின்ற *மலாய்ப்பெண்* போன்றே

      தமிழ்மலாயைக் கற்றிடவே தவறோம் என்று

தமிழர்களே உறுதிகொள்ள வேண்டும் என்று

     தமிழர்க்கே *புத்திசொலும்* மலாய்ப்பெண் ணுக்குத்

தமிழரெலாம் நன்றிசொல்லத் தவற வேண்டாம்  !

    தமிழர்நன்றி சொல்வதற்காய் மலாய்ப்பெண் அன்று

தமிழ்படிக்க விலை,அதுபோல் பலனைப் பார்த்தே

     தமிழ்விலக்க எண்ணாமல் தமிழ்கற் பீரே !

                                                           *பாதாசன்*