சீனர்களும் *பெருந்தொகையர்* மலாயர்களும் அவ்விதமே
சிந்தித் தாலே
சீனர்களும் மலாயர்களும் பலகட்சி களிலிருந்தால்
சேதம் கொஞ்சம்
ஆனதனால் இருவினத்தார் பங்கதுவும் இந்நாட்டின்
அரசாங் கத்தில்
தானதிகம் இருப்பதற்குச் சாத்திரமே பார்த்திடுதல்
சரியே இல்லை !
இந்தியர்கள் இந்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில்
ஏறத் தாழ
முந்திபிந்தி சொல்வதெனில் *ஏழுவிழுக் காட்டினர்தாம்*
மொத்தம் ஆவார் !
இந்தியரோ *குறைவானோர்* இவர்களுக்குள் *பலகட்சி*
இருப்ப தால்தான்
*பந்தியெனும் அரசியலில்* இந்தியரைப் *பச்சடியாய்ப்*
பலர்பார்க் கின்றார் !
பந்தியியிலே *சோறாவார்* மலாயர்களும் ; சீனர்களோ
*பல்கு ழம்பாம் !*
இந்தியரோ *கறிவேப்பி லையாக* அரசியலில்
இருக்கின் றாரே !
எந்தவொரு கட்சியிலும் *பெரும்பான்மை* யாயின்றிச்
*சிதறு தேங்காய்*
அந்தவித மாய்ச் *சிதறி* ஆளுக்கோர் கட்சியென
ஆகி விட்டார் !
எத்தனையோ முறைகேட்டோம் ; இந்தியர்க்கேன் *பலகட்சி*
இங்கே என்றே !
அத்தனைக்கும் பதில்ஒன்றே அவரவர்க்கும் தலைவரெனும்
ஆசை அஃதே !
அத்தனையும் நிறைவேறி விட்டனவா ? அதுவுமிலை
அதனால் இன்று
மொத்தமுமாய்ச் சேராமல் பலகட்சிக் குள்தனியாய்
மூழ்கிப் போனார் !
அரசியலாம் ஆழ்கடலில் முழுமையுமாய் மூழ்கியதாய்
ஆனார் என்றால்
பரபரப்பாய் ஒருவருக்கு மற்றொருவர் உதவிடவே
பார்க்க லாம்தான் !
அரைகுறையாய் முடிவெடுத்துப் பலகட்சி களுக்குள்ளே
அவச ரத்தில்
சிரசினையே *அடகுவைத்த இந்தியர்கள்* தமைமீட்கச்
சிந்திக் கட்டும்
*பாதாசன்
மலேசியா