*முன்னாள் மாணவர்களே* *பரப்புரையைத் தொடருங்கள் !*


தமிழ்ப்பள்ளி
யில்படித்த முன்னாள்மா ணவர்கள்

      பினாங்குநகர் தைப்பூச விழாவினிலே கூடித்

*தமிழ்ப்பள்ளி யேநமது முதல்தேர்வே* என்னும்

        தக்கதொரு *பரப்புரையை* மேற்கொண்ட சேதி

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் *எண்ணிக்கை* உயரச்

       சத்தியமாய் வழிவகுக்கும் எதிர்கா லத்தில் !

நமக்கின்று புதியதொரு நம்பிக்கை தந்த

    நம்முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாழ்க !

இவர்களைப்போல் நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளி களிலே

        இருக்கின்ற  நம்முன்னாள் மாணவர்கள் சேர்ந்தே

அவரவர்,தாம் முன்படித்த தமிழ்ப்பள்ளிக் காக

       ஆண்டுதொறும் புதுப்புதிய மாணவர்கள் சேரத்

தவறாமல் மறவாமல் பரப்புரையைத் தொடர்ந்தால்

       தமிழ்ப்பள்ளி மாணவர்கள் குறைவாரா ; மாட்டார் !

அவசரமாய் மட்டுமல்ல மாணவர்காள் கேளீர் ;

        அவசியமாய்ப் பரப்புரையைச் செய்வீரே ,சரியாய் !

முன்னாளில் *இராசரத்னம்* பேர்கொண்ட நண்பர்

     முன்னாளின் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சங்க

முன்னோடி யாயிருந்து நாடளவில் செய்த

        முக்கியநற் பணிகளையும் இன்றெண்ணிப் பார்த்தே

இந்நாளின் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அமைப்பு

     எழுச்சியுடன் மாணவர்கள் எண்ணிக்கை உயர

பன்னாளும் பரப்புரையை அரும்பணியாய்க் கொண்டே

      பரபரப்பாய் விறுவிறுப்பாய் செயலினையே செய்வீர் !

தமிழ்சார்ந்த எந்தவொரு பொதுநிகழ்வில் இன்று

       தமிழர்களின் பங்கேற்பு  நிறைவுடனே இல்லை !

தமிழ்ப்பள்ளி மாணவர்கள்  குறைவதுதான் இதற்குத்

     தக்கதொரு காரணமாய் இருப்பதுவும் உண்மை !

*தமிழ்வாழ்வு, தமிழ்க்கலைகள், தமிழ்ப்பண்பா டோடு*

      *தமிழ்ப்பற்று, தமிழர்களின் ஒற்றுமை* ஓங் கிடவே

தமிழ்ப்பள்ளி முன்னாளின் மாணவர்கள் என்றும்

      *தமிழ்ப்பள்ளி முதல்தேர்வு*  பரப்புரையைத் தொடர்க !

                                                                                             *பாதாசன்*