*சரவணன் கருத்தில் நியாயமுண்டு* *தனியார்த் துறையீர் ஆராய்வீர் !*

தனியார்த் துறையின் ஊழியர்க்கே

      தக்க *ஓய்வூ தியத்தினையே*

இனியொரு தாமத மில்லாமல்

       இயல்பாய் வழங்க வேண்டுமென்றே

கனிந்த மன *டத் தோசிறியார்*

       *சரவ ணன்* குரல் கேட்டிருக்கும்

தனியார் நிறுவன உரிமையர்கள்

      தாமே முன்நின்(று) உதவிடட்டும் !

அரசின் ஊழியர் அனைவருக்கும்

      அரசு வழங்கும் ஓய்வுநிதித்

தரத்தைப் பிரிக்க அரசாங்கம்

      தனியொரு திட்டம் வகுத்திடவே

சிரத்தை கொண்டே இருப்பதனைத்

   தெரிந்தே *டத்தோ சிறி* அவர்கள்

உரத்த குரலில் தனியாரின்

      ஊழியர்க்(கு) உதவக் கேட்டுள்ளார் !

எனது சொந்த அனுபவத்தில்

    ஏழும் முப்பதும். சேராண்டுக்

கணக்கில் தனியார் நிறுவனத்தில்

    கவன மாக உழைத்திருந்தும்

பணிஓய் வுற்ற போதினிலே

     பணியூ தியமாய் ஏதுமின்றி

முனித லின்றி வந்தவன்நான்

     மூச்சுப் பேச்சே விடுதலின்றி !

இதனால் தனியார் நிறுவனத்தை

       ஏதும் குறைசொல முடியாது !

எதனால் என்றால் அவர்களுடன்

     எவ்வித ஒப்பந் தமுமில்லை !

அதனால் அவர்கள் ஓய்வுபெற்ற

      அடியே னுக்கும் வழங்கவிலை !

இதனைப் பிறரும் தவிர்த்திடவே

      ஏற்ற(து) உரைத்தார் சரவணனும் !

அரசு வருவாய் அதிலதிகம்

     ஆகும் தனியார் தருவதுதான் !

வருவாய் அதினில் சிறுபகுதி

     வழங்கத் தனியார் தந்துவந்தால்

வருவாய் ஓய்வூ தியமாக

      வருமே தனியார் ஊழியர்க்காம் !

சரவணன் கருத்தில் ஞாயமுண்டு !

     தனியார்த் துறையீர் ஆய்ந்திடுக !

                                               *பாதாசன்*