ஜ.செ.க., ஏற்றத்திற்கும் ம.இ.கா.இறக்கத்திற்கும் *என்ன காரணம் ?*

*.செ..,* வரலாற்றைப் பார்க்கின் றேன்நான் ;

      தண்ணீரில் குளித்திடினும் வியர்க்கின் றேனே !

*.செ..* சிங்கைதனை ஆளும் நாளில்

        *மலேசியத்தில்* இணைந்ததுவும் இரண்டே ஆண்டில்

*.செ..,* வை *நாமும்* நீக்கி விட்டோம் !

       மனமார பிரிட்டீசார், ம்றுப்பே இன்றி

*.செ..,* ஆளுகின்ற சிங்கைக் கேதான்

      மகிழ்வுடனே சுதந்திரத்தை வழங்கிவிட்டார் !

மலேசியத்தில் இணைந்திருந்த சிங்கைத் தீவும்

    மாறுபட்ட கொள்கையினால் பிரிந்த போது

மலேசியத்தில் *.செ..,* பேரும் முற்றாய்

     மாறியதாம் *.செ..,* என்ப தாக !

மலேசியத்தில் *சென்மான்ஹின்* தலைமை யின்கீழ்

       மதிப்பாக *.செ..,* வளர்ந்த தோடு

மலேசியத்தில் *லிம்கிட்சி யாங்* கும் நன்கு

    வலுமிக்க எதிர்க்கட்சி ஆக்கி வைத்தார் !

மக்கள்தொண்டன் *வி.டேவிட் ,கர்ப்பால்,பட்டு*

     மாசற்ற தொண்டினையே  வழங்கி னார்கள் !

முக்கியமாய் இந்தியர்கள் *.செ. .வை*

     முதல்நிலைசார் எதிர்க்கட்சி யாகச் செய்தார் !

முக்கிமுக்கி *.செ..,* முயற்சி செய்தும்

         முன்னேறி ஆட்சியினை அமைப்ப தற்குச்

சிக்கலைத்தான் கண்டதுவாம் ! என்றா லும்தான்

      சீரோடு *.செ..* செயல்பட் டாரே !

இந்தியர்க்கு *விழிப்புணர்வை* ஏற்ப டுத்த

    *இண்ட்ராஃபும்* *பேரணியைக்* கூட்டிட் டன்றே !

அந்தப்பே ரணியாலே  விழிப்பு ணர்வை

      அடைந்தார்கள் இந்தியர் என்ப தற்கு

வந்ததொரு சாட்சியதாம் ; *.. .வை*

      *மறந்திட்டார் இந்தியர்கள்* என்ப தாமே !

இந்தியரை விழிப்புணர்த்த வந்த *இண்ட்ராஃப்*

      இப்போது விழிப்புணர்வை இழந்த தாமோ ?

விழிப்புணர்வுப் பேரணியால் இந்த நாட்டில்

       விளைந்தபயன் ; *.செ.* அரசாங் கத்தில்

செழிப்புடனே *பங்கெடுக்க* வழியா யிற்று ;

        செல்லாத காசாக இந்தி யர்கள்

இழிவுறவே *பேரணியும்* செய்தா யிற்றே !

    இந்தியர்கள் *ஒற்றுமையோ* சிதறு தேங்காய்க்

கழிவெனவே சிதறியதே ஐயோ ! ஐயோ !!

      கதியிதனை விருந்துவைத்து நாம ழைத்தோம்  !

இந்தியர்கள் இந்நிலையில் தாழ்ந்த தற்கே

      இவர்க்குள்ளே *பலகட்சி உருவாக் கம்தான்*

முந்திநிற்கும் *காரணமாம்* இதுவே உண்மை !

     முதன்முதலாய் தோன்றியநாள்  முதல் *. செ.*

எந்தவொரு *பிளவுமின்றி ஒன்று பட்டே*

    இயங்குவதால் இன்றாளும் அரசுக் குள்ளே

சந்ததமும் சேர்ந்திருக்கும் நிலைக்கா ளானார் !

     சந்தியிலே இந்தியர்கள் நிற்கின் றாரே !

ஆண்டதொரு *தே.மு.வின்* உறுப்பாய் வாழ்ந்த

      அக்கட்சி * ..கா.,* ஒற்று மையை

நீண்டபெருங் குழிக்குள்ளே புதைத்த தாலே

     நெடும்பெருமை இன்றிழந்தார் ; வெந்தார் ; நொந்தார் !

தோன்றியநாள் முதலாக ஒற்று மையை

       ஊன்றிவரும் காரணத்தால் *.செ.  .வும்*

ஊன்றியதே அரசுக்குள் ஆழ மாக !

   *உணர்வீரே இந்தியரே இன்றே நன்றே !*

        *பாதாசன்*