*பிரதமர் துறைக்கே மீண்டும்* *மித்ரா…! ; நன்றி பிரதமரே…!*


பிரதமர்தம்
துறையினுக்கே மீண்டும் *மித்ரா*

       பெயர்ந்திருக்கும் மகிழ்வான செய்தி கேட்டு

*வரம்* கிடைத்த உணர்வினிலே இந்தி யர்கள்

      மனம்குளிர்ந்தே இருக்கின்றார்  ! இம்மாற் றத்தைச்

சிரமமின்றித் *தாமதமாய்ச்* செய்தி ருக்கும்

     தெளிவுபெற்ற பிரதமர்க்கு நன்றி ; அன்னார்

விரைவினிலே *மித்ரா* வின் வளர்ச்சி தன்னை

       மேடாக்கு வாரென்று நம்பு கின்றோம் !

தம்முடைய நேரடிப்பார் வையில் *மித்ரா*

      சரியாக இனியேனும் செயல்பட் டாகத்

தம்முடைய முழுமையான அதிகா ரத்தைத்

       தவறாமல் மறவாமல் பயன் படுத்தி

இம்மலைய நாட்டிலுள்ள இந்தி யர்கள்

      எதிர்நோக்கும் *நிதிஇடரைப்* பிரத மர்தான்

*இம்* என்னும் முன்னாலே தீர்ப்பார் என்னும்

        நம்பிக்கை துளிர்விடவே காணு கின்றோம் !

*தந்தை* தன் பிள்ளைகையில் செலவுக் காகத்

      *தந்தபணம்* முறையாகச் செலவ ழிக்கும்

சிந்தை,பிள்ளை யிடம்உளதா ? என்ப தைத்தான்

      சீராகத் *தந்தை* யவர்  கண்கா ணிக்க

முந்திநிற்கத் தவறிவிட்டால் கொடுத்த காசு

       முழுவதுமே வீணாகிப் போகும் வாய்ப்பு

வந்துவிடும் *மித்ரா* வில் ; அந்தச் சூழல்

      வாராமல் இருப்பதற்கோர் வழியும் உண்டு !

அந்தவழி என்னவழி ; பிள்ளை கையில்

       அளித்தபணம் வீணாகும் வழியும் தானே

என்னவழி எனத்தந்தை கண்கா ணித்தால்

       எல்லாமே சரியாகும் ; *மித்ரா* வுக்கும்

தந்தபணம் வீணாகும் வழியை முற்றாய்த்

      *தந்தை* எனும் *பிரதமரும் கண்கா ணித்தால்*

எந்தவகை முறைகேடும் *மித்ரா சொத்தில்*

     ஏற்படவே வழியுண்டா ? அரசே சிந்தி !

                                                       *பாதாசன்*