கசங்கிய மலராய்* *இந்திய மாணவர்கள்

*மெட்ரிக் குலேசன்* படிப்பதற்கே

        விண்ணப் பித்த மாணவர்கள்

*தட்டுக் கீழாம்* நிலைசார்ந்த

      தகவே குறைந்த இந்தியர்தம்

மொட்டு மலரா மாணவர்கள்

      மொத்த *இருநூற் றாற்றிளையோர்*

கெட்டித் தனமாய்ப் படித்தோர்க்குக்

      கிடைக்க விலையே வாய்ப்பின்று !

கஷ்டப் படவே வேண்டாமே

        கண்டிப் பாக இடம்கிடைக்கும்

இஷ்டப் படியே படிப்பதற்கே

      இடமும் கிடைப்பது நிச்சயமென்(று)”

*அஸ்மின்* அழகாய் உரைத்துள்ளார் !

        அனைத்து மாணவர்க்(கு) இன்றையநாள்

நஷ்டம்  ஏற்படப் போவதில்லை

   நன்றாய்ச் சொன்னார் அவருந்தான் !

*அசுமின்* அவர்க்கே இடம்கிடைக்கும்

      அப்படி யானால் அவ்விடங்கள்

விசும்பி நிற்கும் மாணவர்க்கே

    வேண்டும் ! வேண்டும் கிடைத்திருக்க !

நசுக்கப் பட்ட எறும்பாக

    நலிந்தார் இன்று மாணவர்கள் ;

கசக்கிப் பின்னே முகர்மலராய்

    கதறி நிற்கின் றார் , ஐயோ !

                                      *பாதாசன்*