கபடி கதைக்களத்தில் பயணிக்கும் ‘பட்டத்து அரசன்’

சற்குணம் இயக்கத்தில் கதாநாயகர்களாக ராஜ்கிரண், அதர்வா நடித்திருக்கும் படம்பட்டத்து அரசன்‘. கபடிவிளையாட்டால் தனது ஊரை உலகறிய செய்திருக்கிறார் ராஜ்கிரண். மகன்கள் மகள் பேரக் குழந்தைகளோடுசந்தோஷ்மாக இருக்கும் ராஜ்கிரணின் இரண்டாவது மகனின் மனைவி ராதிகா, பேரன் அதர்வா இருவரும்குடும்பத்தோடு வாழாமல் தனியாக வசிக்கிறார்கள். வில்லன் ரவிகாலேவுக்கும் ராஜ்கிரணுக்கும் இருக்கும்பகையை ஒரு முடிவுக்கு கொண்டுவர இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் கபடி போட்டி நடத்துகிறார்கள். இதுதான் கதை. ராஜ்கிரண் 70 வயதை கடந்தாலும் உடற்கட்டு குழையாமல் இரும்பு துண்டு போல வைத்திருக்கிறார். தன்னிடம் கபடிபயன்ற மாணவன், தனக்கு எதிராக கபடி விளயாடும்போது அவனை வீழ்த்துகின்ற கட்டம் அபாரம். அதர்வாவின்நடிப்பில் அவரது தந்தை நடிகர் முரளியின் முகம் தெரிகிறது.**********

சிங்கம் புலியின் சிரிப்புக்கு பஞ்சமில்லை. பாலசுப்பிரமணியின் பக்குவமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. கிணற்றில் விழுந்த அதர்வாவை காப்பாற்ற துடிக்கும் ஒரு தாயின் பதட்டமும் துடிப்பும் ராதிகாவின் முகத்தில் அனல் பறக்கிறதுபிரிந்து கிடந்த குடும்பம் ஒன்று சேரும் காட்சியில் படம் பார்ப்பவர்களின் கண்கள் ஈரமாகிவிடுகிறது. குடும்பத்தோடு சென்று பார்க்கும் படத்தை தந்த இயக்குனர் போற்றதலுக்குரியவர்