பழங்குடியின பாடகி நஞ்சியம்மாவின் முதல் தமிழ் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது

ஆதாம்’* திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் தடம் பதித்த இயக்குநர்ஆதாம்’ *சமரின்* முதல் தமிழ் படமான  *‘சீன் நம்பர் 62’*-  நிக்கில் ராமச்சந்திரனின் பவன்புத்ரா பட தயாரிப்பு நிறுவனமும், வேணு ஜிராமின் நவமுகுந்தா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் பாடலான *’என் சேவல்‘* சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  *ஐயப்பனும் கோஷியும்* மலையாளம் படத்தில் இடம்பெற்றகளக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்குபாடலை பாடிய, *68வது தேசிய விருது வென்ற நஞ்சியம்மா* பாடிய பாடல் என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் இந்த பாடலுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.************

பாடலை கேட்ட அனைவரும் பாராட்டி வருகின்றனர். பல வெற்றி பாடல்களை பாடியுள்ள *வேல்முருகன் நஞ்சியம்மாவுடன் இனைந்து இந்த பாடலை பாடியுள்ளார்*. இந்த பாடலின் வரிகள் இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. *சிவபிரகாசத்தின்* வரிகளுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது. *ஆங்கிலம் கலக்காமல் தமிழ் மட்டுமே பயன்படுத்தி* முழு பாடலையும் எழுதியுள்ளார்இப்பாடலுக்கு *ஜிகேவி* மிகவும் பொருத்தமான முறையில் இசை அமைத்துள்ளார். பாடலின் காட்சியமைப்பு அனைத்தும் புதுமையாக உள்ளது என்று பாடலை பார்த்தவர்கள் பாராட்டியுள்ளனர்.

*கோகிலா கோபால், கதிரவன், அமல் தேவ், ஜாய்ஸ், வி ஜே வைத்தி, ஐஸ்வர்யா நந்தன்* மற்றும் *ராகந்த்* ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். புது முகமாக இருந்தாலும் அனைவரும் ரசிகர்களை கவரும்படியாக உள்ளனர். சென்னை, புதுச்சேரி, கொடைக்கானல், பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் *’சீன் நம்பர் 62’* படமாக்கப்பட்டுள்ளது.  போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.  படத்தின் மக்கள் தொடர்புபணிகளை *நிகில் முருகன்மேற்கொண்டுள்ளார்*இந்த சேவல் கண்டிப்பாக பந்தயத்தில் ஜெயிக்கும்* என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.