உள்ளூர் கலைப்பொருட்களை வளர்க்கவும் அவற்றைபிரபலப்படுத்தவும் ஓர் சிறந்த நினைவூட்டியாக கைத்தறி தினம்கொண்டாடப்படுகிறது. பல்வேறு சந்ததியினரிடையேவரவேற்பைப் பெறுவதற்காக தரத்தை மேலும் வலுப்படுத்துவதில்கைத்தறித் துறையும் அது சம்பந்தமான ஊரக கலைப் பொருட்கள்துறையும் கவனம் செலுத்த வேண்டும். தரமான பொருட்களுக்குநுகர்வோர் கூடுதல் ஆர்வம் காட்டுவதால், தர மேம்பாடு, காலத்தின்கட்டாயமாகியுள்ளது.” ‘தேசிய கைத்தறி தினம்’ என்ற தலைப்பில்மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள்தொடர்பு அலுவலகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை ஆகியவை இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்தஇணையதள கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில்காந்திகிராம கிராமிய நிறுவனத்தின் மேலாண்மைப் பிரிவுபேராசிரியரும் தலைவருமான டாக்டர் ஆர் சீரங்கராஜன் கூறினார்.
நெசவுக்கு முந்தைய செயல்முறைகள் மற்றும் தறிஉபகரணங்களின் பராமரிப்பிலும் கவனம் செலுத்துமாறு அவர்வலியுறுத்தினார். இந்தத் துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடுஅதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். உதாரணத்திற்குஉணரி போன்ற தொழில்நுட்பங்களால், ஏதேனும் இடர்பாடுகள்எழும்போது, தானியங்கியாக நெசவாளர்களுக்கு தகவல்அளிக்கப்படுவதன் மூலம் அது போன்ற பிரச்சினைகளை சுலபமாகஎதிர்கொள்ளலாம். சாயத்தின் செயல்முறைகளில் நிலையானவழிகாட்டுதல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர்வலியுறுத்தினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேசிய கைத்தறி மேம்பாட்டுக்கழகத்தின் மூத்த அதிகாரி திரு விஜய் பிரதாப் கௌதம்பேசுகையில், இதே தினத்தன்று தொடங்கப்பட்ட சுதேசிஇயக்கத்தைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்படுவதாகக்கூறினார். கைத்தறி பொருட்கள் பற்றி மக்களிடையேவிழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம்கடைப்பிடிக்கப்படுகிறது. உள்ளூர் பொருட்களின் பயன்பாடுமற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பது தான் சுதேசி இயக்கத்தின்முக்கிய நோக்கம். அடிமட்ட அளவில் கைத்தறி துறையில்சேவைகளை அளிப்பதற்காக கைத்தறி அலுவலகங்களும் அதன்கிளைகளும் சென்னை உட்பட நாடு முழுவதும் பல்வேறுஇடங்களில் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நெசவுத் தொழிலில் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதிருவண்ணாமலை தேவிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நெசவாளிதிரு பி. தனசேகரன், தமது குடும்பம் மூன்று தலைமுறைகளாகஇந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். பெருந்தொற்றுகாலகட்டத்தில் பிற துறைகளைப் போல நெசவுத் தொழிலிலும்கொவிட் தொற்றின் தாக்கம் பெரிதும் காணப்பட்டதாக அவர்தெரிவித்தார். மூலப்பொருட்களின் விலை உயர்வு, வேலை இழப்புஉள்ளிட்ட பிரச்சினைகளை நெசவாளிகள் சந்தித்தனர். ஆரணியில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவின் பணிகளை விரைவுபடுத்தவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். ஆரணியில் சுமார்ஒரு லட்சம் நெசவாளிகள் வசிப்பதால் இந்த முன்முயற்சி சந்தைஉள்ளிட்ட துறைகளில் பேருதவியாக இருக்கும். கோரா, ஜரிபோன்ற பொருட்களை அரசே கொள்முதல் செய்து நியாயமானவிலைகளில் நெசவாளர்களுக்கு அளிக்கவேண்டும் என்றும் அவர்கேட்டுக்கொண்டார்.
இந்த வலைதள கருத்தரங்கில் தலைமை உரை நிகழ்த்தியசென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் திருஜே. காமராஜ், மகாத்மா காந்தி, கைத்தறியை ஏழ்மையை ஒழிக்கும்முக்கிய கருவியாக மட்டும் பயன்படுத்தாமல், ஆங்கிலேயர்களுக்குஎதிரான மாபெரும் ஆயுதமாகவும் பயன்படுத்தி, அதில் வெற்றியும்கண்டார் என்று தெரிவித்தார். கைத்தறி உள்ளிட்ட உள்ளூர் கலைப்பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை ஊக்குவிக்கும்கொள்கையின் அடிப்படையில் தற்சார்பு இந்தியா திட்டம்உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நல்வாழ்விற்காக பிரதமர்திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு அனைத்துநடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தேசிய கைத்தறிதினத்தன்று காதி மற்றும் இதர ஊரகத் தொழில்துறைகளின்பொருட்களை வாங்கி இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களின்வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிப்போம் என்று அனைவரும் உறுதிஏற்போம் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, புதுச்சேரி கள மக்கள் தொடர்பு அலுவலகத்தின்துணை இயக்குநர் டாக்டர் சிவகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக அதிகாரி திருமிகுவித்யா ஏ.ஆர் நன்றி தெரிவித்தார்.