மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மூலமாக எண்ணற்ற பொது மக்கள் பயன்பெற்று வருவதாககிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. எஸ்.ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் கிருஷ்ணகிரிமாவட்டம் பாலகுறி கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “மத்திய அரசின் சாதனை திட்டங்கள்” குறித்தசிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்துப் பேசிய அவர், மத்திய மாநில அரசுகள் இணைந்துமக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார். குறிப்பாக நோயாளிகள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் மக்கள் மருந்தகம், திறன்இந்தியா இயக்கம், தரமான குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் குடிநீர் வழங்கும் திட்டம், அனைத்து தரப்பு மக்களும்அதிகளவில் பயன்படுத்தும் டிஜிட்டல் இந்தியா, பெண் குழந்தைகள் பயன்பெற செல்வ மகள் சேமிப்புத் திட்டம், மிஷன் லைப், விவசாயிகள் பயன்பெறும் ஆறாயிரம் ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கிவருகிறது. இதன் மூலம் எண்ணற்ற மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள்குறித்து அனைத்து மக்களும் அறிந்து கொள்ளவும், இத்திட்டங்கள் மூலம் பயன்பெறவும் இது போன்றவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. எனவே பொது மக்கள் திட்டங்களை நன்கு அறிந்து பயன்பெறவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். விழாவில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தபுகைப்பட கண்காட்சிகள் அமைக்கபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் பல்வேறு போட்டிகளில்வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் திருமதி சோ.ஈஸ்வரி சேகர் ஊராட்சி மன்ற தலைவர் தலைமை வகித்தார். மாவட்டதொழில்மைய உதவி இயக்குநர் திரு.ராமமூர்த்தி, ஆயுள் காப்பீடுக் கழக முதன்மை மேலாளர் திரு. இரா.நேரு, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திரு. பீ.ராகவேந்திரன், இந்தியன் வங்கியின் சுய தொழிற் பயிற்சிமையத்தின் இயக்குநர் திரு.தி.ஜெகன்னாத், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. கி.முருகன், திரு.ஆர்.ரவிவனச்சரகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக கள விளம்பர அலுவலர் திரு.பிபின் எஸ் நாத்வரவேற்புரை ஆற்றினார். இறுதியில் திரு. மு.தியாகராஜன் கள உதவியாளர் நன்றி கூறினார்.