சர்வதேச அபாகஸ் போட்டியில் நெய்வேலி மாணவர்கள் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்

8-வது சர்வதேச அபாகஸ் போட்டி துபாயில் நடைபெற்றது. 16 நாடுகளைச் சேர்ந்த 2,000 மாணவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில்நெய்வேலியைச் சேர்ந்த மாணவர்கள் ஏழு பேர், தங்களது அற்புதமான திறனால், சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். சர்வதேச அரங்கில் மிகச் சிறிய வயதிலேயே சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற அம்மாணவர்களை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு.பிரசன்னகுமார் மோடு பள்ளி நேரில் பாராட்டினார்.