“மின் வரைவு, வயரிங் ஆட்டோமேஷன் மற்றும் கட்டிடங்களுக்கான சூரிய ஒருங்கிணைப்பு” என்ற தலைப்பில் திறன் மேம்பாடு கருத்தரங்கம்

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறைசார்பாகமின் வரைவு, வயரிங் ஆட்டோமேஷன் மற்றும் கட்டிடங்களுக்கான சூரிய ஒருங்கிணைப்புஎன்றதலைப்பில் ஏழு நாள் திறன் மேம்பாடு கருத்தரங்கமானது கல்லூரியில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய்வளாகத்தில் இன்று காலை (17.07.2023) தொடங்கியது. இக்கருத்தரங்கை கழகத்தின் பதிவாளர் முனைவர் சீ. சுந்தரவரதன் மற்றும் Er. எஸ் சுரேஷ், உதவி பொறியாளர், துணை சுமை அனுப்பும் மையம், ஈரோடு இவர்கள் இருவரும் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார். இக்கருத்தரங்கில்  04 பாலிடெக்னிக் மாணவர்கள், 51 பட்டதாரி மாணவர்கள் மற்றும் 05 ஆசிரியர்கள் எனமொத்தம் 60 பேர் பங்கேற்றுள்ளனர்

 இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளரான முனைவர். ரேவதி எஸ் அவர்கள் கூறுகையில் இக்கருத்தரங்கமானது உள்நாட்டு வயரிங் மற்றும் விநியோக முறைகளில் உள்ள கருத்துகள் மற்றும்முறைகளைப் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் அவர்பேசுகையில் சூரிய ஒருங்கிணைப்புடன் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கானவழிமுறைகளை இத்திட்டத்தின்மூலம் அறிந்துகொள்வார்கள் என கூறினார்.

 இக்கருத்தரங்கில் மாநில மின்சார வாரியத்தின் உதவி பொறியாளர்கள், கட்டிட கட்டுமான நிறுவனங்களின்குழுக்கள், ஆட்டோமேஷன் நிறுவனங்களின் பொறியாளர்கள், சூரிய சக்தி வர்த்தக நிறுவல் நிபுணர்கள் மற்றும்காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் ஆசிரியர்கள் இவர்கள் அனைவரும் உரையாற்றவுள்ளார்கள். இக்கருத்தரங்கின் ஏற்பாடுகள் அனைத்தையும் முனைவர். ராம் ஜெத்மலானி மற்றும் முனைவர். ரேவதி எஸ்இவர்கள் இருவரும் துறை உறுப்பினர்களின் உதவியோடு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.