இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னைக் கிளை அலுவலகம், “”பஞ்சகர்மா உபகரணங்கள் மற்றும்பாரம்பரிய மருத்துவம்” என்ற தலைப்பில் சென்னையில் 31 ஆகஸ்ட் 2023 அன்று மானக் மந்தன் – கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தியது. ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்தியாளர்கள், ஆயுர்வேத அறிவியல், யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களின் ஆய்வாளர்கள்மற்றும் பிற பங்குதாரர்கள் உள்பட சுமார் 100 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சென்னை கிளை அலுவலகத்தின் இயக்குனர் மற்றும் தலைவர் ஸ்ரீமதி ஜி பவானி, நிகழ்ச்சியின் நோக்கங்களைவிளக்கினார். BIS ஒவ்வொரு மாதமும் தொழில்துறையின் நலனுக்காக “மானக் மந்தன்” என்ற தலைப்பில் புதியதொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்புகள், வர்த்தக சபைகள், தொழில் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அத்தகைய தயாரிப்புகளைப்பயன்படுத்தும் நிறுவனங்கள், அரசுத் துறைகள், ஒழுங்குமுறை அமைப்புகள், ஆய்வகங்கள், சிவில் சமூகக்குழுக்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தவும், உள்ளூர்உற்பத்தியாளர்களுக்கு முக்கியமான திருத்தங்கள் மற்றும் பரவலான புழக்க வரைவுகளைப் பகிரவும்திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் ஐ சங்கீதா நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராககலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஆயுஷ் துறையின் ஆராய்ச்சி அதிகாரி (ஆயுர்வேதம்) டாக்டர் ராகவேந்திர நாயக் மற்றும் டாக்டர் ஜி. கிருத்திகா, ஆராய்ச்சி அதிகாரி (சித்தா), ஆயுஷ் துறை ஆகியோர் தொழில்நுட்ப பேச்சாளர்களாகவும் கலந்து கொண்டுசிறப்புரை ஆற்றினர்.
பஞ்சகர்மா என்பது ஆயுர்வேதத்தில் ஒரு தனித்துவமான நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை முறையாகும். நோயைஉண்டாக்கும் காரணிகளை தீவிரமாக நீக்குவதற்கும் தோஷங்களின் சமநிலையை பராமரிப்பதற்கும் இதுபரிந்துரைக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில் உள்ள ஐந்து நடவடிக்கைகள் யாதெனில், வாமனா விரேச்சனா, அனுவாசனா வஸ்தி , ஆஸ்தாபன வஸ்தி மற்றும் நாஸ்யா ஆகியவை அடங்கும். பஞ்சகர்மா சிகிச்சைக்குமுன்னதாக சிநேகனா (ஒலியேஷன்) மற்றும் ஸ்வேதனா (சூடேஷன்) உள்ளிட்ட சில ஆயத்த நடைமுறைகள்உள்ளன. சம்சர்ஜன கர்மா, சிகிச்சைக்கு பிந்தைய செயல்முறையாக செய்யப்படுகிறது என்று நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுக்கு விளக்கப்பட்டது இன்றய மானக் மந்தன் கலந்துரையாடலில் பின்வரும் இந்திய தர நியமங்கள் பற்றிய விவாதங்கள் நடைபெற்றன.
• பஞ்சகர்மா உபகரணங்கள் பகுதி-1: துரோணி விவரக்குறிப்புகள் IS 18089 (பகுதி 1): 2022
• பஞ்சகர்மா உபகரணங்கள் பகுதி-2: ஷிரோதரா யந்திர விவரக்குறிப்புகள் IS 18089 (பகுதி 2): 2022
• அஸ்வகந்தா விதானியா சோம்னிஃபெரா எல் டுனல் ரூட் விவரக்குறிப்பு – பாரம்பரிய மருத்துவத்தில்பயன்படுத்த IS 18098:2022
இந்த இந்திய தர நியமங்கள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சிகிச்சையின் செயல்திறனை உறுதி செய்கின்றன. அவை வடிவமைப்பு, பொருட்கள் மற்றும் பரிமாணங்களில் சீரான தன்மையை உறுதிசெய்து பயிற்சியாளர்மற்றும் நோயாளி அனுபவத்தை மேம்படுத்துகின்றன. தரநிலைகள் ஒழுங்குமுறை இணக்கத்திற்குஉதவுகின்றன, தொழில்துறையில் நம்பிக்கையை வளர்க்கின்றன. ஒட்டுமொத்தமாக, தரப்படுத்தப்பட்டஆயுர்வேத உபகரணங்கள் ஆயுர்வேத சிகிச்சையின் நடைமுறையை உயர்த்துகின்றன, பாரம்பரியநம்பகத்தன்மையை நிலைநிறுத்துகின்றன, மேலும் நோயாளியின் நல்வாழ்வை கட்டமைக்கப்பட்ட மற்றும் நம்பகத்தன்மையை பாதுகாக்கின்றன.
ஸ்ரீமதி. அனுரிதா நிதி ஹெம்ரோம், விஞ்ஞானி–பி/உதவி இயக்குநர்,BIS-சென்னை கிளை அலுவலகம் மற்றஅமர்வுகளை நடத்தினார். இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும்பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப்பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பைநோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.