சென்னை வருமானவரித்துறை, இணை வருமானவரி ஆணையரகம், வருமான வரிப் பிடித்தம் பிரிவு -3, தோல்ஏற்றுமதிக்கான குழுமம் இணைந்து வருமானவரிப் பிடித்தம் குறித்த கருத்தரங்கை, 04-09-2023 அன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தோல் ஏற்றுமதி குழும வளாகத்தில் நடத்தியது.
திரு ஆர். செல்வம், ஐஏஎஸ், நிர்வாக இயக்குனர், தோல் ஏற்றுமதி குழுமம், இணைய வழியாக கருத்தரங்கைதுவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த வருமான வரிப் பிடித்தம் குறித்த கருத்தரங்கை, திரு இ. இளங்கோ, ஐஆர்எஸ் , வருமானவரி துணைஆணையர், டிடிஎஸ் வட்டம்3(1), சென்னை, தலைமை ஏற்று முக்கிய உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், டிடிஎஸ்/டிசிஎஸ் விதிகளை முறையாக பின்பற்றி நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாகஇருக்குமாறு அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார். மேலும், வரிப்பிடித்தம் / வரிவசூல் செய்ததொகையினை உரிய காலத்தில் மத்திய அரசின் கணக்கில் செலுத்திடவும், டிடிஎஸ்/ டிசிஎஸ் காலாண்டுபடிவங்களை உரிய காலத்தில் தாக்கல் செய்யவும், டிடிஎஸ்/ டிசிஎஸ் சான்றிதழ்களை அளித்திடவும் கேட்டுகொண்டார்.
இந்த கருத்தரங்கில் திரு எல். ராஜாராமன், திரு கே.செந்தில்குமார், மற்றும் திரு டி.வி. ஸ்ரீதர் ஆகிய வருமானவரித்துறை அதிகாரிகள் டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் விதிகளின் சாராம்சத்தை விளக்கி டிடிஎஸ்/ டிசிஎஸ்விதிகளை பின்பற்றவில்லையெனில் ஏற்படும் விளைவுகளையும் தெளிவாக எடுத்துரைத்தனர்.
இந்த கருத்தரங்கித்தில் 25-க்கும் மேற்பட்டோர் நேரிடையாகவும் ,45 க்கும் மேற்பட்டோர் இணைய வழியிலும்கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
கருத்தரங்கின் முடிவில் தோல் ஏற்றுமதி குழும உதவி இயக்குநர் திரு டி.கோகுலகிருஷ்ணா நன்றி கூறினார்.