திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 91 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும், அதன் செயலாளர்களுக்கும் வருமானவரிப் பிடித்தம் செய்வது தொடர்பான ஐந்தாவது விழிப்புணர்வு கருத்தரங்கம் திருவள்ளூர் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் சென்னை வருமான வரி துணை ஆணையர் திரு இ. இளங்கோ அணிந்துரை வழங்கினார். வருமான வரி சட்டத்தில் இடம் பெற்றுள்ள டிடிஎஸ், டிசிஎஸ் விதிகளை வருமான வரி அலுவலர்திரு எல் ராஜாராமன் விளக்கினார். வருமான வரிப் பிடித்தம் செய்வது எப்படி, ஆதார், பான் அட்டை இணைக்கப்படாவிட்டால் எவ்வளவு வரிப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து வருமான வரி அலுவலர்திரு டி வி ஸ்ரீதர் வழங்கினார்.
வருமான வரிப் பிடித்தம் செய்வது தொடர்பான விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஏற்படும் விளைவுகளைவருமானவரி அலுவலர் திரு கே செந்தில்குமார் விளக்கினார். வருமான வரி பிடித்தம் செய்த தொகையைஇணையவழி மூலமாக எவ்வாறு மத்திய அரசின் கணக்கில் செலுத்துவது, ட்ரேசஸ் தளத்தில் டிடிஎஸ்காலாண்டுப் படிவங்களை எப்படி தாக்கல் செய்து என்பது குறித்த செயல்முறை விளக்கத்தை வருமானவரிஆலோசகர் திருமதி ஜானகி அளித்தார். இந்தக் கருத்தரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.