பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  பொரிப்பகங்களில் வளர்க்கப்பட்ட பச்சை வரி இறால்  குஞ்சுகளை கடலில் விடுதல்

6.8 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள், மண்டபம், கோயில்வாடி பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மத்தியமீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதியுதவியுடன், தமிழ்நாட்டின் மன்னார்வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில்வளர்த்து, கடலில் விடுதல் என்ற திட்டத்தின் கீழ் மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர், Dr. K. வினோத், Dr. G. தமிழ்மணி, திட்டத்தின் தலைவர், மண்டபத்திலுள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சிநிலைய விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில்

திரு. M. சிவகுமார், உதவி இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மண்டபம், விசைப்படகு சங்கம்மற்றும் நாட்டுப்படகு சங்க முக்கிய நிர்வாகிகள் அவர்களால் கடலில் விடப்பட்டன. இத்தகைய முயற்சிக்குஇந்திய அரசு மற்றும் ICAR-CMFRI க்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், பச்சை வரி இறால் வளத்தைபாதுகாக்க, இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

திட்டம் துவங்கியதிலிருந்து (பிப்ரவரி, 2022), இதுவரை 75.34 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள்மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் விடப்பட்டன. இந்நிகழ்ச்சியை, மண்டபம் மத்தியகடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய  மூத்த விஞ்ஞானி, Dr. B. ஜான்சன் ஒருங்கிணைத்தார்.