புதுவைப் பல்கலைக்கழகத்தில்  துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையத் தலைவர் ஆய்வு

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்திய அரசு, துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசியஆணையத் தலைவர் திரு எம். வெங்கடேசன், “கையால் கழிவுகள்  அகற்றும் துப்புரவாளர்கள் பணியமர்த்துவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013″ அமலாக்கம்  பற்றி ஆய்வுசெய்ய புதுவை  பல்கலைக்கழகத்திற்கு  வருகை தந்தார்.  இது சம்மந்தமாக துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத்சிங் துப்புரவுத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவோர் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுடன்  அவர்  கலந்துரையாடினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேராசிரியர் கே.தரணிக்கரசு, இயக்குநர் (ஆய்வுகள், கல்விப் புத்தாக்கம் மற்றும்கிராமப்புற மறுசீரமைப்பு), பேராசிரியர் ராஜீவ் ஜெயின், (கலாச்சார மற்றும் கலாச்சார உறவுகள்), பேராசிரியர்ரஜ்னீஷ் பூடானி, பதிவாளர் (பொறுப்பு), பேராசிரியர் டி. லாசர், நிதி அலுவலர் (பொறுப்பு), டாக்டர் நந்தகிஷோர், மக்கள் தொடர்பு அதிகாரி  மற்றும் புதுவை  பல்கலைக்கழகத்தின் பிற அதிகாரிகள் கலந்துகொண்டனர்.