பொறியாளர்கள் இந்தியா நிறுவனம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியர்ஸ் (இந்தியா), திருச்சிராப்பள்ளி மையம், இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களில் ஒருவரான பாரத ரத்னா எம் விஸ்வேஸ்வரய்யா அவர்களின்163வது பிறந்தநாளில் 56வது தேசிய பொறியாளர் தினத்தை கொண்டாடியது. எம் விஸ்வேஸ்வரய்யா (சர். எம். வி) மற்றும் இந்திய பொறியாளர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஆவார்.
டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் என்.கோபாலசுவாமி தலைமை விருந்தினராகப்பங்கேற்று, IEI TLC சிறந்த பொறியாளர் விருது – 2023 ஐ IEI TLC ன் முன்னாள் தலைவர் மற்றும் BHEL-ன்முன்னாள் கூடுதல் பொது மேலாளர் Dr. S. கருப்பசாமி அவர்களுக்கு வழங்கினார்.
திருச்சி IEI மற்றும் BHEL க்கும் அவரது இடைவிடாத சேவைகளைப் பாராட்டி விருது வழங்கினார். அவர் தனதுஉரையில், கட்டுமானத்தில் பயன்படுத்துவதற்கு அதிக மீள்திறன் மற்றும் பாதுகாப்பான புதிய பொருட்களைப்புதுமைப்படுத்தவும் கண்டுபிடிக்கவும் பொறியாளர்களுக்கு வலியுறுத்தினார். மேலும் இளம் பொறியாளர்உலகத்தை வழிநடத்த நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும்என்றார்.
டாக்டர். எஸ். கருப்பசாமி தனது ஏற்புரையில், மனிதன், பறவைகள், விலங்குகள் மற்றும் இயற்கையில்இறைவனின் படைப்பு மிகவும் பரிபூரணமாகவும் தனித்துவமாகவும் இருப்பதால், வளர்ந்து வரும்பொறியாளர்களாகிய நாம் நமது உயர்திறன் மற்றும் பொறியியல் கல்வி மூலம் அற்புதமான விஷயங்களைஉருவாக்க வேண்டும். மற்றும் சமூகத்திற்கு நன்மை பயக்கும் வண்ணம் பணியாற்ற வேண்டும் என்றார்.
விழாவிற்கு முன்னாள் தலைவர் ஆர்.செல்வராஜ் தலைமை வகித்து வரவேற்றார். சாரநாதன் பொறியியல்கல்லூரி பேராசிரியர் டாக்டர் எஸ். ரவி மாறன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தடாக்டர். கெவின் ஆர் குமார் நன்றியுரை வழங்கினார். NITT, BHEL மற்றும் IEI இன் உறுப்பினர்கள் மற்றும்அவர்களது குடும்பத்தினர் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.