தமிழ்நாடு அரசின் சென்னை (தெற்கு) அலுவலர்களுக்கான வருமானவரிப் பிடித்தம் மற்றும் வருமானவரி வசூல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

வருமான வரி இணை ஆணையரகம், டி டி எஸ்   சரகம்-3, சென்னை மற்றும் கருவூல கணக்கு ஆணையரகம், சென்னை இணைந்து, தமிழ்நாடு அரசு அலுவலர்களின் நலன் கருதி, வருமானவரிப் பிடித்தம் செய்யும்அலுவலர்களுக்கு 
திரு M முரளி,  வருமானவரி  ஆணையர் (டி.டி.எஸ்), சென்னை மற்றும் திரு M அர்ஜுன் மாணிக், வருமானவரிஇணை ஆணையர், டி டி எஸ்   சரகம்-3, சென்னை இவர்களின் அறிவுறுத்தலின்படிஇன்று (21-09-2023) பேராசிரியர் அன்பழகன் மாளிகை, சென்னையில்   வருமானவரிப் பிடித்தம் மற்றும் வருமானவரி வசூல்தொடர்பான விழிப்புணர்வு கருதரங்கத்தை நடத்தினர். இதில், சம்பள கணக்கு அலுவலர் (தெற்கு) சென்னையின் கீழ் வரும் வருமானவரிப் பிடித்தம் செய்யும் அலுவலர்கள் அவர்களின் உதவியாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

திரு வெங்கடேசன், உதவி  சம்பள கணக்கு அலுவலர் (தெற்கு) தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார்.

வருமானவரி அலுவலர் திரு L ராஜாராமன், வருமானவரிச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு  TDS / TCS விதிகளின் சாராம்சத்தை விளக்கினார். மேலும் அவர், வருமானவரிப் பிடித்தம் செய்யவேண்டியதன்முக்கியத்துவம், வருமானவரிப் பிடித்தம் செய்த தொகையை மத்திய அரசின் கணக்கில் காலத்தே செலுத்தவேண்டிய கட்டாயம், TDS  / TCS காலாண்டு படிவம் தாக்கல் செய்யவேண்டிய தேவை, TDS /TCS சான்றிதழ்வழங்கவேண்டிய அவசியம் இவைகள் குறித்து எளிமையாக விளக்கினார்.

அவர் குறிப்பாக, சம்பளம் மற்றும் ஒப்பந்த செலவில் வருமானவரிப் பிடித்தம் செய்வதன் அவசியம் குறித்தும், தேவயற்றப்பொருட்களை விற்பனை செய்யும் போது வருமானவரி வசூல் செய்ய வேண்டிய தேவை குறித்தும்தெளிவாக விளக்கினார்.    

மேலும், ஒவ்வொரு வரிப்பிடித்தம் செய்பவரும், நிதி ஆண்டின் ஆரம்பத்திலேயே, தமது அலுவலகத்தில்பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்கள் பெறக்கூடிய மொத்த  சம்பளத்தை முன்கூட்டியே கணக்கிட்டு, அந்தநிதி ஆண்டிற்கு, வருமானவரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரி விகிதங்களின் அடிப்படையில்  அவரவர், செலுத்த வேண்டிய வருமானவரியை கணக்கிட்டு, அதனை சராசரி அடிப்படையில் , முதல் மாதசம்பளத்திலிருந்தே வரிப் பிடித்தம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வருமானவரி அலுவலர் திரு T V ஸ்ரீதர், வருமானவரிப் பிடித்தம் / வருமான வரி வசூல் விதிகளை முறையாகபின்பற்றவில்லையெனில், ஏற்படும் விளைவுகளான வட்டி, தாமத கட்டணம், அபராதம் மற்றும் வழக்குஇவைகளை தெளிவாக எடுத்துரைத்தார் .

இந்த கருத்தரங்கத்தில், சென்னை தலைமை ஆணையரகம் (TDS), அவர்களின் அரும்பணியால், வருமானவரிப்பிடித்தம் செய்பவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட கீழ்கண்ட வசதிகளை, அவர்கள் தேவைக்கேற்பபயன்படுத்திக்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டது.