மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பகம் திருச்சி கள அலுவலகம் சார்பில் நாகமங்கலம்க்ரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தூய்மையே சேவை இயக்கம் விழிப்புணர்வு உறுதிமொழிஇன்று ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நோக்கவுரையாற்றிய திருச்சி கள விளம்பர அலுவலர் திரு கே தேவி பத்மநாபன் மத்திய அரசுசார்பில் தூய்மையே சேவை இயக்கம் கடந்த செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை கொண்டாடி வருவதாகக்கூறினார்.
தூய்மை இந்தியா இயக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்ததை சுட்டிக் காட்டிய அவர், 9 வது தூய்மை இந்தியா இயக்கம் வரும் அக்டோபர் 2 கொண்டாட உள்ளதாக தெரிவித்தார். தூய்மை இந்தியாஇயக்கம் மூலம் 12 கோடி தனிநபர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறினார். திறந்த வெளியில் மலம்கழிப்பதைத் தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகக் கூறிய அவர், தமிழ்நாட்டில் 97 சதவிகிதத்துக்கும் அதிகமான கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமில்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
குப்பைகளை முற்றிலும் அகற்றுவதே இந்தாண்டின் கருப்பொருளாகும் என்று கூறிய அவர் மக்கும் குப்பைமக்காத குப்பை என பிரித்து கொடுத்து தூய்மைக் காவலர்களின் சுமையை குறைக்க வேண்டும் என்றார். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்திய அவர் பிளாஸ்டிக் பைகள் தவிர்த்து துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
நாகமங்கலம் க்ரியா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி தாளாளர் திருமதி கிறிஸ்டி சுபத்ரா, சுத்தம் மற்றும்சுகாதாரம், சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார். தன் சுத்தம் மிகவும் முக்கியமானது என்று கூறியஅவர், மாணாக்கர்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து கொடுத்து பெற்றோருக்குஉதவி செய்ய வேண்டும் என்றார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்று கூறிய அவர், நெகிழிப்பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் க்ரியா பள்ளி முதல்வர் திருமதி சாந்தி சிறப்புரையாற்றினார். திருச்சி கள விளம்பரஉதவியாளர் திரு எஸ் அருண்குமார் நன்றியுரையாற்றினார். தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் தூய்மைப்பணிகள் மேற்கொண்டு குப்பைகள் அகற்றப்பட்டன.