உழவர்கரை நகராட்சியைத் தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ளப் பல்வேறு நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நகராட்சியில் ஒரு நாளைக்கு சுமார் 150 மெட்ரிக் டன் குப்பைசேகரிக்கப்படுகின்றது. இதில் சுமார் 35 சதவீதம் பிளாஸ்டிக் குப்பையாகும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும்பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்தாமல் நிறுத்தினாலே நகரம் அழகாகிவிடும். பொதுமக்கள்குப்பைகளைக் கவனமாகத் தரம் பிரித்துத் தரவேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் பொதுமக்கள்குப்பைகளை சாலைகள், கால்வாய்கள், காலிமனைகளில் போடக்கூடாது என்று உழவர்கரை நகராட்சிஆணையர் திரு. ஏ.சுரேஷ்ராஜ் கேட்டுக்கொண்டார்.
இந்திய அரசின் மத்திய தகவல் தொடர்பகம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து இன்று முற்பகல்செயின்ட் பேட்ரிக் சீனியர் செகண்டரி பள்ளியில் நடத்திய தூய்மை இருவார சேவை சிறப்பு நிகழ்ச்சியில்உரையாற்றியபோது திரு. சுரேஷ்ராஜ் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சிக்குப் பள்ளித் தாளாளர் திரு ரெஜீஸ் ஃபிரெடெரிக் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர்திருமிகு, அல்ஃபோன்சா ஹில்டா முன்னிலை வகித்தார்.
மத்திய தகவல் தொடர்பக துணைஇயக்குனர் முனைவர் தி.சிவக்குமார் சிறப்புரை ஆற்றினார். கீப் தொண்டுநிறுவனத்தின் திரு.கெளதம்குகன் குப்பைகளைக் கையாளும் முறைகள் குறித்து உரை ஆற்றினார். மாணவர்கள்தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நகராட்சி ஆணையர் ஏ.சுரேஷ்ராஜ் துண்டுபிரசுரங்களை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து இதே நிகழ்ச்சி முத்துரத்தினம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி முதல்வரும்தாளாளருமான திரு. ஜே.சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். மத்திய தகவல் தொடர்பக துணை இயக்குனர்முனைவர் தி.சிவக்குமார் சிறப்புரை ஆற்றினார். மாணவர்கள் தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பிற்பகல் மூன்றாம் நிகழ்ச்சி இந்திராநகர் இந்திராகாந்தி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாநிலநாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. தா.சதீஷ்குமார் சிறப்புரை ஆற்றினார். குப்பைகளை உருவாக்குகின்றநாம்தான் குப்பைகளை அகற்றுவதற்கும் பொறுப்பு ஏற்க வேண்டும். நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள்எப்போதும் எங்கும் தவறாமல் தூய்மைப் பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் தூய்மைக் காவலர்கள். இந்தசேவை மனப்பான்மையை மாணவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும் என்று திரு. தா.சதீஷ்குமார் தனது உரையில் கேட்டுக் கொண்டார்.
மத்திய தகவல் தொடர்பக துணை இயக்குனர் முனைவர் தி.சிவக்குமார் சிறப்புரை ஆற்றினார். மாணவர்கள்தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பள்ளித் துணை முதல்வர் திரு. சந்திரன் , பள்ளிக் கல்விக்கான நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்திரு.கே.மதிவாணன், பள்ளி என்.என்.எஸ். அலுவலர் திரு.லட்சுமி நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. தா.சதீஷ்குமார் துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்.