விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள்தொடர்பகம் சென்னை நடத்தும் அரசின் மக்கள் நலத்திட்டங்கள், தேசிய ஊட்டசத்து மாதம், சர்வதேசசிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை குறித்த இரண்டுநாட்கள் புகைப்படமற்றும் டிஜிட்டல் கண்காட்சியை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் மற்றும் ராஜபாளையம்சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் திறந்து வைத்து மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டனர். பின்னர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய சென்னை பத்திரிக்கை தகவல் அலுவலக இணை இயக்குநர்அருண்குமார், அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதன் மூலமே சமூகம் பொருளாதார வளர்ச்சிகண்டுவருவதாகவும், வறட்சியை தாங்கி வளர்ந்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து தருவது சிறுதானியம்என அறிந்து ஐநா சபை நடப்பு ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடி வருகிறது என்றும்இந்தியாவில் ஊட்டச்சத்து நிறைந்த குழந்தைகள் அதிகம் இருந்த காரணத்தால் தான் மத்திய அரசு போஷன்அபியான் திட்டத்தை கொண்டு வந்தது என்றார்.
சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நாம்வாழ நெகிழி பயன்பாட்டை குறைத்து துணிபைகளை பயன்படுத்த வேண்டும் எனகேட்டுக்கொண்டனர். பின்னர் பேசிய விருதுநகர் உதவி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கண்ணன் மத்தியஅரசின் அடல் பென்ஷன் யோஜனா போன்ற பல்வேறு வகையான காப்பீடு திட்டங்களின் பயன்கள் குறித்துஎடுத்துரைத்தார்.நிகழ்ச்சியில் பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும்பாராட்டு சான்றிதழ்களையும், ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பரிசுகளையும் தனுஷ் எம்.குமார் எம்.பி மற்றும்ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார்,மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர்திலிப்குமார், மாவட்ட திட்ட அலுவலர் ஹேமலதா, தேசிய தொழிலாளர் கல்வி மற்றும் வளர்ச்சி வாரிய கல்விஅதிகாரி கிரிஜா சிவகாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். மதுரை மத்திய மக்கள் தொடர்பாக கள விளம்பர உதவியாளர்போஸ் வெல் ஆசிர், தொழில்நுட்ப உதவியாளர் எம் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.