நிலப்பரப்பு மற்றும் நீர்வளங்களில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை, ஸ்வாட் எனப்படும் மண் நீர்  மதிப்பீட்டுக் கருவி மூலம் கண்டறிவது சம்பந்தமான ஐந்து நாள் பயிலரங்கம் திருச்சி என்.ஐ.டியில் துவங்கியது

திருச்சி என்..டி (தேசிய தொழிநுட்பக் கழகம்) கட்டுமானப் பொறியியல் துறையின் சார்பில் (சிவில்இன்ஜினியரிங்) ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த பயிலங்கராமனாது செப்டம்பர் 25 – 29-ம் தேதி வரைநடைபெறுகிறது. என்..டி இயக்குனர், சிறப்பு விருந்தினர் மற்றும் பேராசிரியர்கள் குத்து 
விளக்கேற்ற, நிகழ்வானது தொடங்கியது.

கட்டுமானப் பொறியியல் துறையின் இணை பேராசிரியர் முனைவர் எஸ்.சரவணன் அவர்கள் வரவேற்பு உரையைநிகழ்த்தினார். அப்போது, அவர் காலநிலை மாற்றம் குறித்தும், இந்தப் பயிலரங்கத்தின் நோக்கம் மற்றும்சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து பேசிய துறைத் தலைவர் எஸ்.டி ரமேஷ், திருச்சி என்..டி கட்டுமானப் பொறியியல் துறையின் வரலாறுச் சாதனைகள் மற்றும் துறையின் சிறப்பானசெயல்பாடுகள் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து பயிலரங்கத்தின் தேவை மற்றும் நோக்கம் 
குறித்து திருச்சி என்..டி ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைத் துறையின் டீன் 
முனைவர் வி. சங்கரநாராயணன் பேசினார்.

அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான திருச்சி 
என்..டியின் இயக்குனர் முனைவர் அகிலா அவர்கள், ஆராய்ச்சி மற்றும் 
தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு உகந்த சூழலை வளர்ப்பதில் என்..டி நிறுவனம் காட்டும் அக்கறை மற்றும்முன்னுரிமை குறித்து விரிவாகப் பேசினார்இறுதியாக, தாய்லாந்து ஆசிய தொழில்நுட்பக் கழகத்தைச்சேர்ந்த பேராசிரியரும், இந்தப் பயிலரங்கத்தின் சிறப்பு விருந்தினருமான சங்கம் ஸ்டேஷ்டா அவர்கள்பேசினார். அப்போது, உலகளாவிய அளவில் சுற்றுச்சூழல் நிலை குறித்தும், எதிர்காலத்தில் சுற்றுச்சூழலில்ஏற்படவிருக்கும் சவால்கள் குறித்தும், அதற்கு தொழில்நுட்பத்தின் பங்கு என்னவாக இருக்கும் என்பதுகுறித்தும் விரிவாக உரையாற்றினார். என்..டி  இயக்குனர் மற்றும்  பேராசிரியர்கள் இணைந்து சிறப்புவிருந்தினர் சங்கம் ஸ்டேஷ்டா அவர்களுக்கு  நினைவுப் பரிசினை வழங்கினார். இறுதியாக கட்டிடப்பொறியியல் துறையின்  பேராசிரியை ஜெயலட்சுமியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.