போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (சிவிஆர்டிஇ) இயக்குநராக ஜெ ராஜேஷ்குமார் பொறுப்பேற்றார்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) கீழ் ஆவடியில் செயல்படும் போர் ஊர்திஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (சிவிஆர்டிஇ) புதிய இயக்குநராக பிரபல விஞ்ஞானி திரு ஜெராஜேஷ்குமார் அவர்கள் 29 செப்டம்பர் 2023 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதுவரை இயக்குநராகஇருந்த விஞ்ஞானி திரு வி பாலமுருகன் அவர்கள் இன்று ஓய்வு பெற்றதையடுத்து திரு ராஜேஷ்குமார்நியமிக்கப்பட்டார்.

இதற்கு முன்னதாக திரு ராஜேஷ்குமார் அவர்கள் பிரதான பீரங்கி உற்பத்திக் குழுவின் இணை இயக்குநராகவும், இலகுரக பீரங்கி திட்டத்தின் இயக்குநராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் முன்முயற்சியில் இந்திய ராணுவத்திற்கு 118 அர்ஜுன் பீரங்கிகள் ஆர்டர்அதிகரிப்புக்கும் முதலாவது இலகுரக பீரங்கி வடிவமைப்புக்கும் இவர் முக்கியப்பங்கு வகித்தார். எந்திரப்பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்ற இவர், பிரிட்டனில் உள்ள க்ரான் ஃபீல்டு பல்கலைக்கழகத்தின்ராணுவ அறிவியல் கல்லூரியில் ராணுவ வாகனத் தொழில்நுட்பத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.