பெண்கள் தங்கள் கல்விக்கு அதிலும் உயர்கல்விக்குமுக்கியத்துவம் தர வேண்டும். பெண்கள் படிக்கவே கூடாதுஎன்ற காலம் போய் பள்ளி இறுதித் தேர்வுகளில்மாணவர்களைவிட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெறும்காலமாக இன்றைய காலகட்டம் உள்ளது. பாரதி கண்டபுதுமைப் பெண்களாக மாணவிகள் மாறவேண்டும். அதற்குகடுமையாக உழைப்பதோடு உரிமைக்கு அஞ்சாமல் குரல்எழுப்பும் துணிவும் வேண்டும். பொதுவாக ஆண்களைவிடபெண்களுக்குத்தான் மனோதிடம் அதிகம். பெண்களின்உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். ஒப்பீட்டு அளவில்புதுச்சேரியில் பெண்களுக்கான சுதந்திரமும் பாதுகாப்பும்திருப்திகரமாக உள்ளன. பெண்களின் உரிமைகள் குறித்துஆன்களுக்கு கற்பிக்க வேண்டும். மாணவிகள் தங்கள் வீடுகளில்உள்ள தந்தை, சகோதரர்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டில்நாம் பெண்களுக்கு உரிய மரியாதையை உறுதி செய்வதோடுசுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் வீராங்கனைகள்குறித்து தெரிந்துகொண்டு அவர்களின் தியாகத்தையும் போற்றவேண்டும் என்று புதுச்சேரி அரசின் செய்தி–விளம்பரத்துறையின் அரசு செயலரும் ஆசாதி கா அம்ருத்மகோத்சவ் மாநிலக் குழு உறுப்பினர்–செயலருமானதிரு.செ,உதயகுமார் தெரிவித்தார். புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு களஅலுவலகமும் புதுச்சேரி தொழில்நுட்பவியல்பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்துநடத்திய இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு பெருவிழாவின்ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஆன்லைன் பேச்சுப் போட்டியில்வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும்வழங்கியபோது செயலர் உதயகுமார் இவ்வாறு தெரிவித்தார். பரிசளிப்பு நிகழ்ச்சி செயலரின் அறையிலேயே நடைபெற்றது.
முன்னதாக மக்கள் தொடர்பு கள அலுவலக துணைஇயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் தனது அறிமுக உரையில்28.8.2021 அன்று நடத்தப்பட்ட வெபினாரில் சாகித்தியஅகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.பாவண்ணன் மற்றும்புதுச்சேரி தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் மின்னணுமற்றும் கணிப்பொறியியல் துறைப் பேராசிரியர் டாக்டர்க.நாகராஜன் இருவரும் நடுவர்களாக இருக்க விடுதலைப்போராட்டத்தில் பெண்களின் பங்கு எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்றுபரிசுகள் வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.முதல் பரிசை ஏபி. நிவேதிதா, இரண்டாம் பரிசைசி.தாமரைச்செல்வி மற்றும் இரண்டு மூன்றாம் பரிசுகளை எஸ்.ஸ்ரீமதி மற்றும் எஸ்.சந்தியா ஆகியோர் செயலாளர்திரு.செ.உதயகுமாரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் புதுச்சேரி தொழில்நுட்பப்பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரும் நாட்டுநலப்பணித் திட்ட அலுவலருமான டாக்டர் எஸ்.ராஜேந்திரன்மற்றும் கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன்ஆகியோரும் கலந்து கொண்டனர்.