புதுச்சேரி ஏனாமில் உள்ள டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அரசு கலைக்கல்லூரி சார்பில் என் மண் என்தேசம் இயக்கத்தின் கீழ் அமிர்த கலச யாத்திரைக்கு அங்குள்ள டாக்டர் எஸ்.ஆர்.கே அரசு கலைக் கல்லூரியின்பழைய கருத்தரங்க அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
என் மண் என் தேசம் இயக்கத்தின் கீழ் அமிர்த கலச யாத்திரை நம் தாய்நாட்டிற்காக உயர்ந்த தியாகம் செய்ததுணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலரும் ஒரு கோப்பை அரிசி கொண்டு வந்து அமிர்த கலசத்திற்குவழங்கியுள்ளனர். இந்த கலசம் மண்டல ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும், டாக்டர்எஸ்.ஆர்.கே அரசு கலைக் கல்லூரி முதல்வர் டாக்டர் வி.பாஸ்கர் ரெட்டி இந்த நிகழ்ச்சிக்கு சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார். “அமிர்த கலசம்” என்ற கருப்பொருளின் முக்கியத்துவம் குறித்து பேசியஅவர், நமது தாய்நாட்டிற்கு துணிச்சலான இதயங்கள் செய்த தியாகத்தை அங்கீகரிப்பதும், பாராட்டுவதும் நமதுகடமை என்று குறிப்பிட்டார். என்.எஸ்.எஸ்., மண்டல ஒருங்கிணைப்பாளர், சிந்தப்பள்ளி சுதாகர் சிறப்புவிருந்தினராக பங்கேற்றார். நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்களுடன் கலந்துரையாடிய அவர், நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கியதுடன், தன்னார்வலர்களின் முனைப்பான பங்களிப்பை பாராட்டினார். கணித உதவிப் பேராசிரியர் ஜி.பிரபாகர் தன்னார்வலர்களை ஊக்குவித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அனைத்து நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்களும் விருந்தினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன்இணைந்து ஐந்து உறுதிமொழிகள எடுத்துக்கொண்டனர். டாக்டர் எஸ்.ஆர்.கே., அரசு கலைக்கல்லுாரிஎன்.எஸ்.எஸ்., பிரிவு-2 திட்ட அலுவலர் எஸ்.ஸ்ரீனிவாஸ் நன்றி கூறினார்.